Friday, 14 October 2016

தமிழனென்று சொல்லடா....! தலைநிமிர்ந்து நில்லடா.....!!

தமிழனென்று சொல்லடா....!
தலைநிமிர்ந்து நில்லடா.....!!
உன்னை காறியுமிழ்ந்து
கழுவேற்றிடும் வரை .....!











இமைக்கும் இடைவெளியில்
தலையல்ல தலைகள் கொய்யப்படும்....
ஆனால்....! அவன் அகமுகத்திற்கு
முகபூச்சுடன் அவன் வாழ்நாளை
அழங்கரித்துக்கொண்டுருக்கிறான்....

தமிழினம் அறைநிரவாணமாய்....
வண்புணர்வுற்காற்பட்டு துடிக்கிறது....
தமிழனும் துடிக்கிறான்....
முக்குவளை சோற்றுடன்
தொலைகாட்சி நேரலையை
கண்டுகொண்டே....

ஒருவேளை....
உன் இனங்காக்க
பிரியாணி பொட்டலமும்
மதுவும் பணமும்
தேவைப்படுகிறதோ.....!

கொண்டவன் புணர்ச்சிக்கு
ஆயுத்தமாக புண்பட்டுகிடக்கிறது
என் நாடு....
கொண்டவனுக்கும் கவலையில்லை...
கொடுத்தவனுக்கும் கவலையில்லை....

இவ்வண்ணம்...
இப்பயனில்ல பதிவுகளிட்டு
இதைக்கடக்கும் நாம்
மாறி மாறி காறியுமிழ்ந்து கொள்வேம்....
நம் அவலட்சண முகங்களிலே.....

No comments:

Post a Comment