Wednesday, 19 October 2016

ஏரியா 51- ஏலியன்ஸ்-மாயன்-மர்மங்கள்...!



எமது அறிவியலின் ஆராய்ச்சித் தன்மைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா? ஒரு குறித்த அளவுக்கு மேல், பலவற்றை அதனால் ஆராய முடியாமல் போய் விடுகிறது. அவற்றிற்கான விளக்கத்தை அறிவியல் கொடுக்காத பட்சத்தில், மக்களே அதற்கான பல விளக்கங்களை, கட்டுக் கதைகளாகக் கட்டிவிடத் தொடங்கிவிடுவார்கள். இதனால் மிஞ்சுவது குழப்பம் மட்டும்தான். எனவே, பல விந்தைக்குரிய விசயங்கள் மக்களைச் சென்று அடைவதற்கு முன்னரே, அரசுகளால் மறைத்து வைக்கப்படுகின்றது.
இப்படி மறைத்து வைத்து, அவற்றைத் தொடர்ச்சியாக ஆராய்வதற்கென்றே, அமெரிக்காவில் ‘ஏரியா 51' (Area 51) என்ற ஒரு இடத்தை மிகப் பாதுகாப்பாக அமைத்து வைத்திருக்கிறார்கள்.

கீழே இருப்பது சாட்டிலைட் மூலமாக 'ஏரியா 51' இன் காட்சிப் படம். இந்த 'ஏரியா 51’ அமெரிக்காவில் உள்ள நிவாடாவில் (Nevada) அமைந்திருக்கிறது. குறிப்பாக ஏரியா 51 இல் பறக்கும் தட்டுகள் (Flying saucer), வேற்றுக் கிரகவாசிகள் (Alien) ஆகியவற்றை ஆராய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் உச்சக்கட்டமாக, விண்வெளியில் இருந்து வந்த ஒரு பறக்கும் தட்டையும், விண்வெளி உயிரினம் ஒன்றையும் ஏரியா 51இல் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்னும் வதந்தி பலமாகவே இருக்கிறது. ஆனால் அங்கிருந்து இரகசியமாக கசிந்து வெளிவரும் தகவல்களும், படங்களும் அவை வதந்திதானா என்றே எம்மைச் சந்தேகப்பட வைக்கிறது.





 


















ஏரியா 51 இல் எடுத்த இந்தப் படத்தில் வட்டமாக இருப்பது ஏதோ கட்டடம் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள். அதை நன்றாகப் பாருங்கள். அது பறக்கும் தட்டு போல இருக்கிறதா? இந்தப் படம் மட்டுமில்லை, 'அலன் லூயிஸ்' (Alen Lewis) என்பரால் வெளிக்கொண்டு வரப்பட்ட இன்னுமொரு படமும், எம்மை அதிர வைக்கும் தன்மையை உடையது.

தன்னுடைய அப்பா ஏரியா 51இல் வேலை செய்ததை அறியாத ஒரு மகன் அவர் இறந்ததும் கண்டெடுத்த படத்துடன் அவர் கொடுத்த குறிப்பு இது.
"Recently, my father passed away and while i always thought that he worked in the BLACK OPS ARENA i never thought that he had anything to do with aliens certainly, he never mentioned it. While cleaning out his house, i ran across the attached photo, if you look in the bottom right hand corned of the container there is an AREA 51 badge..."



இந்தப் படத்தை எப்படி எடுப்பது? இது பற்றி என்ன சொல்வது?
இவற்றையெல்லாம் நம்புவதோ அல்லது வதந்தி என ஒதுக்குவதோ எங்கள் பிரச்சினை என்றாலும், இது உண்மையாக இருந்தால் என்னும் கேள்வி, காட்டமான விளைவையே உருவாக்கக் கூடியது. இந்த ஏரியா 51 ஐ, 'இன்டிபென்டன்ஸ் டே' (Independence Day) என்னும் 'வில் ஸ்மித்' (Will Smith) நடித்த படத்தில் விபரமாகவே காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் அடிப்படைக் கருவே நான் மேலே சொன்னதுதான்.

இங்கு நான் ஏலியன்கள் எம்முடைய பூமிக்கு வந்திருக்கிறார்களா என்று ஏன் ஆராய வேண்டும்? ஏரியா 51 போன்றவற்றையெல்லாம் ஏன் மாயாவை ஆராயும் இடத்தில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். சரியாக யோசித்தால், மாயன்களின் அனைத்து நடவடிக்கைகளும், ஏதோ ஒரு விதத்தில் விண்ணையும், விண்வெளியின் வேற்றுக் கிரகவாசிகளையும் நோக்கியதாகவே அமைகின்றன. அவற்றிற்கெல்லாம் உச்சக்கட்டமாய் அமைந்த கிறிஸ்டல் மண்டையோடு கூட, மாயன்களுக்கு ஏலியன்கள் மூலம்தான் கிடைக்கப்பெற்றிருக்கின்றன என்ற முடிவுக்குத்தான் கொண்டு செல்கிறது. விண்ணிலிருந்து ஏலியன்கள் வந்ததற்கு சாட்சியாக 'ஏரியா 51' உள்ள படம் இருக்கலாம் என்றாலும், அது மட்டுமே சாட்சியாக இருந்துவிட முடியாது. ஆகவே இதை மேலும் ஆராய்ந்து பார்க்கலாம்.
இப்பொழுது நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவத்துக்கும், மாயாவுக்கும் எந்தவிதமான சம்பந்தம் இல்லை என்று நினைத்தாலும், சம்பந்தம் உண்டு என இப்போது பல ஆராய்ச்சியாளர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். சந்திரனை ஆராயச் சென்ற அப்போலோ விண்கலத்தின் ஆராய்ச்சியாளர்கள் எடுத்த இந்தப் படத்தை முதலில் பாருங்கள்.
இதில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிகிறதா.....….?






கொஞ்சம் பெரிதாக்கிய இந்தப் படத்தைப் பாருங்கள். இப்போது ஏதாவது தெரிகிறதா….?

மண்டையொடு தெரிகிறதல்லவா? ஆம், அது மண்டையோடேதான். மனிதனே வாழ முடியாத சூழ்நிலை இருக்கும் சந்திரனில். இதில் ஆசரியம் என்னவென்றால் அது ஒரு கிறிஸ்டல் மண்டையோடு. இது எப்படிச் சாத்தியம்? யாரால் இதற்குப் பதில் சொல்ல முடியும்?

அந்த மண்டை ஓட்டை அப்போலோ விண்கலத்தில் சென்றவர்கள், கூடவே எடுத்தும் வந்திருக்கிறார்கள். அது இப்போ ஏரியா 51 இல் இருக்கிறது. இப்படி ஒரு மண்டையோடு சந்திரனில் எடுக்கப்பட்டதாக மக்களுக்குச் சொல்லப்படவேயில்லை. காரணம், பதிலே சொல்ல முடியாத மர்மமாக அது இருப்பதால். இப்படி ஒரு மண்டையோடு ஒன்று சந்திரனில் இருந்தது என்று உலக மக்கள் தெரிந்து கொண்டால், இதுவரை மக்கள் நம்பிய அனைத்து நம்பிக்கைகளும், மதக் கோட்பாடுகளும் அடிபட்டுப் போய்விடும். அதனால் உலகின் சமநிலையே குலைந்து விடும் சூழ்நிலை உருவாகும். இது போன்ற காரனங்களினால், அதை மறைத்து விட்டனர். அப்படி மறைக்கப்பட்டவை உலகில் பல உண்டு.
உலகின் சமநிலை குலைந்து விடக் கூடாது என்பது மட்டுமில்லை மறைக்கப் பட்டதற்குக் காரணம். விஞ்ஞான வளர்ச்சியால் கண்டுபிடிக்கப்படும் எதையும், இதுவரை மதங்களின் உச்சக் கட்டமைப்புகள் எதிர்த்தே வந்திருக்கின்றன. காரணம், மதங்களின் வேதப் புத்தகங்களில் சொல்லப்பட்டவைக்கு மாற்றாக அவை அமைந்திருப்பதுதான்.

உலகில் உள்ள பல அரசுகள் மதங்களின் கட்டுப்பாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்றும் இருக்கின்றன.
சந்திரனில் மண்டை ஓடு இருப்பதற்கான சாத்தியங்கள் என்னவாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதுதான் வந்து சேர்ந்தது அடுத்த ஒரு படம். செவ்வாய்க் கிரகத்தைச் (Mars) சுற்றி அமெரிக்கா அனுப்பிய விண்கலம் எடுத்த படங்களில், வித்தியாசமான உருவங்கள் காணப்பட்டன. அந்தப் படங்களில் மனிதத் தலை போன்ற பெரிதாக அமைப்புகள் காணப்படுகின்றன.

அது மட்டுமல்ல, மண்டை ஓடுகள் போன்றவைகளும் நிலத்தில் காணப்படுகின்றன. செவ்வாய் கிரகத்தின் மனிதத் தலை வடிவில் இருக்கும் இது என்ன?

இந்தப் படம் அந்தச் சமயத்திலேயே வெளி வந்திருந்தது. ஆனால் பலர் அதை ஒரு தற்செயல் நிகழ்வெனப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது இணைய வலையமைப்பின் மூலம் உலகமே ஒன்றாக இணைந்துவிட்ட நிலையில், பல இரகசியங்களை சம்பந்தப்பட்டவர்கள் கசிய விடத் தொடங்கிவிட்டனர். அதனால் கிடைக்கும் தகவல்கள் மூலம் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இப்போது நம்மால் பார்க்க முடிகிறது.
செவ்வாயில் மனித முகம், சந்திரனில் மனித மண்டை ஓடு, மாயாவில் கிறிஸ்டல் மண்டை ஓடுகள். இவற்றை இப்போது இணைத்துப் பார்க்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதனால் அவர்கள் சில முடிவுகளுக்கு வந்தனர். அவர்கள் வந்த முடிவுகள்தான் இவை.......!

'பால் வெளி மண்டலம்' எனச் சொல்லப்படும் 'மில்க்கி வேயில்' (Milky Way) அதியுயர் தொழில் நுட்ப அறிவுடன், மனித வடிவில் வேற்றுக் கிரகவாசிகள் வாழ்கின்றனர். அவர்கள் செவ்வாயில் தங்கள் தளங்களை அமைத்து பூமியை ஆராய்ந்து வந்திருக்கின்றனர். செவ்வாயில் ஏற்பட்ட விண்கல் தாக்குதலினால் அங்கிருந்து கிளம்பி தற்காலிகமாக சந்திரனில் தங்கியிருந்திருக்கின்றனர். இதனால்தான் செவ்வாயிலும், சந்திரனிலும் மண்டை ஓட்டு வடிவங்கள் கிடைக்கச் சாத்தியங்கள் இருந்தன. இந்தச் சமயங்களிலேயே விண்வெளி மனிதர்கள் பூமிக்கு வந்து வந்து போயிருக்கிறார்கள். அவர்கள் வந்து போன இடங்களில் ஒன்றுதான் மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த இடம். இவர்களே மாயன்களுக்கு கணிதம், வாணியல், கட்டடக் கலை, விவசாயம், வரைகலை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் நான் கடந்த பதிவில் சொல்லியிருந்த 'இண்டியானா ஜோன்ஸ்' படம் எடுத்திருக்கிறார்கள்.
‘இண்டியானா ஜோன்ஸ்’ திரைப் படத்திற்கு ஜனரஞ்சகம் தேவை என, திரைப்பட உத்திக்காக மிகைப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும், அதன் அடிப்படைக் கரு என்பது தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் பலரது முடிவுகளாகவே இருக்கின்றது. இப்படி முடிவுகளை மற்றவர்கள் போல ஆராய்ச்சியாளர்கள் எழுந்தமானமாக எடுத்துவிட முடியாது. அப்படி எடுத்தால், ஏன் எடுத்தார்கள் என்பதற்கான காரணங்களையும் அவர்கள் சொல்ல வேண்டும்.
இந்த முடிவை அவர்கள் எடுத்ததற்கான காரணங்களையும், ஆதாரங்களையும் அடுக்கடுக்காகச் சொல்லிக் கொண்டே போனார்கள். அதில் முதன்மையாக அவர்கள் வைத்த ஆதாரம்தான் 'நாஸ்கா லைன்ஸ்' (Nazca Lines).

நாஸ்கா கோடுகள் என்பவை பற்றி நீங்கள் அறிந்தால், இப்படியும் உலகத்தில் இருக்கிறதா? என்று ஆச்சரியப்படுவீர்கள். தமிழர்கள் பலர் அறியாத ஒன்று அது.
அது என்ன நாஸ்கா லைன்ஸ்? அதை அடுத்த பதிவில் பார்ப்போமா.....!

Note:
வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுடன் (UFO) பூமிக்கு வந்து சென்றதுபற்றியும், பலர் அவற்றை நேரில் கண்டது பற்றியுமான கதைகள் உலகம்முழுவதும் இலட்சக்கணக்கில் இருக்கின்றன். ஏலியன்களைக் கண்டதுமட்டுமல்லாமல் ஏலியன்கள், அவர்களது பறக்கும் தட்டுக்கு தங்களைஅழைத்துச் சென்று பல பரிசோதனைகள் செய்ததாகவும், தங்கள் உடம்பில்எதையோ செலுத்திவிட்டு அனுப்பியதாகவும் பலர் கதை கதையாகச்சொல்லியிருக்கிறார்கள். இவற்றுகெல்லாம் ஆதாரங்களாகப்புகைப்படங்களும், காணொளிகளும் நிறைந்து போய் இருக்கின்றன.இணையத்தளத்தில் இது பற்றி நீங்கள் தேடினீர்களேயானால் தகவல்கள்நீர்வீழ்ச்சி போலக் கொட்டும். ஆனால் இவையனைத்தையும் ஏதோ ஒருவிதத்தில் போலி என்றே நாஸா போன்றவை மறுத்து வந்தன. படங்களும்,காணொளிகளும் கணினிகளாலும், புகைப்பட உத்திகளாலும் உருமாற்றப்பட்டுநம்மை ஏமாற்றுவதற்கு உருவாக்கப்படுகின்றன என்றே அவர்கள்சொல்கிறார்கள். இதில் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் சொன்னதுபோல போலியான படங்களும், காணொளிகளும் இருப்பது என்னவோஉண்மைதான். போலிகளை ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து, அவற்றைப்போலிகள் என்று வரிசையாக நிரூபித்து வந்தபோது, உண்மையாகவும்இருக்கலாம் என்று சொல்லக் கூடியவையும் அந்த அமளியினுள் அமுங்கிப்போய்விடுகின்றன. மொத்தத்தில், 'ஆவிகளுடன் பேசுகிறோம்' என்றுசொல்பவர்களை, அதை நம்பாதவர்கள் எப்படிப் பார்க்கிறார்களோ, அந்தநிலையில் இந்த ஏலியன், பறக்கும் தட்டு விசயங்களும் பார்க்கப்படுகின்றன.ஏலியன்கள் பற்றியோ, பறக்கும் தட்டுகள் பற்றியோ பேச ஆரம்பித்தாலே, "இதோ கதை விடுகிறான் பாருங்கள்" என்னும் ஏளனப் பார்வைவந்துவிடுகிறது. ஆனாலும் எல்லாவற்றையும் அப்படித் தட்டிக் கழித்துவிட்டுப்போக முடியாது. நம்பியே தீர வேண்டிய சம்பவங்களுடனும், அவற்றுக்கானஆதாரங்களுடனும் ஏலியன்கள் வந்தது உண்மைதான் என அடித்துச்சொல்லும் நிலையும் இருக்கத்தான் செய்கிறது. இவற்றை விளக்கிப் பலபுத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் இங்குநான் சொல்ல ஆரம்பித்தால், இந்தத் தொடர் நீண்டுகொண்டே போய்விடும்.அத்துடன் இந்த விசயத்தில் பொறுப்புணர்வுடன் தகவல்களை நான்உங்களுக்குத் தரவேண்டும்.இந்த ஒரேயொரு காரணத்தினாலேயே மிகுந்த கவனத்துடன் நான்ஆதாரங்களைத் தேடி உங்களுக்குத் தரவிரும்புகிறேன். மிகவும்நம்பிக்கையான, திட்டவட்டமான அறிவியல் காரணங்கள் இருந்தால் மட்டுமேஅவற்றை உங்களுக்கு தரவிரும்புகிறேன். நான் தரும் தகவல்களில் கூடதரவுகள் முழுமையாக இருந்தாலும், அவற்றையும் எதிர்க்கும் எதிர்ப்புக்குரல்கள் இல்லாமலும் இல்லை. அதனால் நான் தரும் சம்பவங்களையும்,தகவல்களையும் கூட நீங்கள் முழுமையாக நம்பிவிடாமல், சந்தேகப்பட்டியலில் வைத்திருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

Saturday, 15 October 2016

‘காப்ரேகர் எண்கள்’ (Kaprekar Numbers)

Raj siva.blogs
எச்சரிக்கை: உங்களுக்கு அறிவியலிலும், கணிதத்திலும் சிறிதாவது ஈடுபாடில்லையா? தயவுசெய்து இந்தப் பதிவைப் படிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.

'காப்ரேகர்' (Kaprekar) என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவரோ, வேறு தேசத்தைச் சேர்ந்தவரோ கிடையாது. இவர் ஒரு இந்தியர். மும்பாயின் ஒரு கிராமத்தில் பிறந்தவர். 'ராமச்சந்திர காப்ரேகர்' என்பது இவரின் முழுமையான பெயர். இவர் ஒரு கணித மேதை. மேற்குலகம் வியப்புடன் பார்க்கும் ஒரு ஆச்சரியமான கணிதவியலாளர். டிஜிட்டல் இந்தியா என்றதும் பரவசப்படும் இளைஞர்களில் பலருக்கு, மேற்குலகமே வியந்து பாராட்டிக்கொண்டிருக்கும் இந்திய அறிவியலாளர்கள்பற்றி அதிகம் தெரிந்திருப்பதில்லையென்பதே மறுக்க முடியாத உண்மை. அந்த அறிவியலாளர்களுக்கு அரசியலில் எந்தவொரு ஆளுமையும் இல்லாமல், அறிவியலில் மட்டும் ஆளுமை இருந்ததால், தன் சொந்த நாட்டில், சொந்த இடத்தில் மறக்கப்பட்டவர்களாகிவிடுகின்றனர்.

காப்ரேகர் கண்டுபிடித்த ‘காப்ரேகர் எண்கள்’ (Kaprekar Numbers) என்பது கணிதத்தில் பிரபலமானது. உதாரணமாக, 703 என்பது ஒரு காப்ரேகர் எண்ணாகும். இதன் விசேசத்தன்மை என்னவென்றால், இந்த எண்ணின் வர்க்கம், அதாவது இந்த எண்ணை இதே எண்ணால் பெருக்கிவரும் பெரிய எண்ணை, இரண்டு பகுதிகளாகப் பிரித்து, அவற்றை ஒன்றுடன் ஒன்று கூட்டினால், ஆரம்ப எண் வரும். சரி இதைப் பாருங்கள்.

703X703=494209 அல்லவா? இதில் வரும் 494209 என்பதை எடுத்து, அதை 494 மற்றும் 209 ஆகப் பிரியுங்கள். இப்போது, இவையிரண்டையும் கூட்டுங்கள்.

494+209=703. மீண்டும் ஆரம்ப எண்ணான 703 மீண்டும் வருகிறதல்லவா? எனவே 703 ஒரு காப்ரேகர் எண்ணாகும்.

இப்படி 9, 45, 55, 99, 297….. என்பவை வரிசையாக காப்ரேகர் எண்களாகும். நீங்களே இவற்றின் வர்க்கத்தை எடுத்துச் செய்துபாருங்கள்.

ஆனால், நான் இங்கு சொல்ல வந்தது காப்ரேகர் எண்களைப்பற்றியல்ல. காப்ரேகரின் புகழைச் சொல்வது, ‘காப்ரேகர் எண்கள்’ மட்டுமல்ல, ‘காப்ரேகர் மாறிலி’ (Kaprekar’s Constant) என்பதும்தான். 'காப்ரேகர் மாறிலி' என்பது மிகவும் ஆச்சரியமான ஒரு எண். இந்த எண்ணை அடிப்படையாக வைத்து, எழுத்தாளர் ‘சுதாகர் கஸ்தூரி’ (Sudhakar Kasturi), '6174' என்று ஒரு அருமையான நாவலையும் எழுதியிருக்கிறார்.

அந்த எண் 6174.

'6174' ஒரு அதிசய எண். இந்த அதிசய எண்ணைக் கண்டுபிடித்தவர் காப்ரேகர். 'சரி இந்த எண்ணில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது?' என்றறிய ஆவலாக இருக்கிறதா?

அதைப் பார்க்கலாம் வாருங்கள்……..

காப்ரேகர் சொன்னது இதுதான், "6174 என்னும் எண்ணில் உள்ள இலக்கங்களை முதலில் இறங்குவரிசையாகவும், ஏறுவரிசையாகவும் வரும் எண்களாக மாற்றி எழுதிக்கொள்ளுங்கள். பின்னர் இறங்குவரிசை எண்ணிலிருந்து ஏறுவரிசை எண்ணைக் கழியுங்கள். அப்போது மீண்டும் அதே 6174 என்னும் எண் வரும்".

அது என்ன இறங்குவரிசை எண், ஏறுவரிசை எண்? பெரிய இலக்கத்திலிருந்து சின்ன இலக்கம்வரை வரிசையாக எழுதுவது இறங்குவரிசை எண். சின்ன இலக்கத்திலிருந்து பெரிய இலக்கம்வரை வரிசையாக எழுதுவது ஏறுவரிசை எண். அவ்வளவுதான். இதன்படி, 6174 இன் இறங்குவரிசை எண் 7641, அதன் ஏறுவரிசை எண் 1467.

காப்ரேகர் சொன்னதுபோல, இறங்குவரிசை எண்ணிலிருந்து, ஏறுவரிசை எண்ணைக் கழிப்போம்.

7641-1467=6174.

அதாவது 6174 என்னும் எண்ணின் இ.வ. எண்ணிலிருந்து, ஏ.வ.எண்ணைக் கழித்தால் அதே 6174 மீண்டும் வரும்.

இத்துடன் முடிந்துவிடவில்லை '6174' தரும் ஆச்சரியங்கள்.

நான்கு இலக்கங்களைக்கொண்ட எந்த இலக்கத்தையும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். சரி, உதாரணமாக 8539 என்னும் எண்ணை எடுத்துக் கொள்வோம். அதை இ.வ.எ, ஏ.வ.எ என மாற்றிக் கழித்துக்கொள்வோம்.

9853-3589=6264

இப்போது 6264 என்பதை மீண்டும் இ.வ.எ, ஏ.வ.எ ஆக மாற்றிக் கழித்துக்கொள்வோம்.

6642-2466=4176

இந்த எண்ணுக்கும் அதேபோலச் செய்தால்,

7641-1467=6174

இறுதியாக நாம் பெறுவது 6174 என்னும் எண்ணாகவே இருக்கும். இப்போது 6174 ஐ நாம் வரிசைப்படுத்தினால், அது 6174 ஆகவே இருக்கும். இந்த எண் மீண்டும் மீண்டும் நம்மை அதன் சுழலில் இழுத்துக்கொண்டிருப்பதால், இதைக் 'கருந்துளை எண்' (Blackhole) என்றும் சொல்வார்கள்.

நீங்கள் 9999 க்குக் கீழே உள்ள நான்கு இலக்கங்களைக் கொண்ட எந்த எண்ணை எடுத்தும் (1111, 2222, 3333.......9999 எண்கள் இவற்றில் அடங்காது) அதனை இ.வ.எண், ஏ.வ.எண் ஆகப் படிப்படியாக மாற்றினால் உங்களுக்கு இறுதியில் கிடைப்பது 6174 என்னும் எண்ணாகவே இருக்கும். அதிகப்படியாக ஏழாவது படியில் 6174 எண் உங்களுக்கு விடையாகக் கிடைக்கும். முடிந்தவரை பல எண்களை இப்படி முயற்சிசெய்து பாருங்கள். எப்போதும் 6174 என்னும் எண் வந்து உங்களை அணைத்துக் கொள்ளும். அதனால்தான் '6174' என்பதை 'காப்ரேகரின் மாறிலி' என்பார்கள்.

மூன்று இலக்க எண்களுக்கான காப்ரேகரின் மாறிலி எண் 495 ஆகும்.

By Rajsiva.blogspot

உயரத்தையும் நிறையையும் மாற்றும் ESP திறன்..!


அமெரிக்காவில்…
மன்ஹட்டன் நகரத்தில் ஒரு ESP தொடர்பான ஆய்வுகூடம்…
பல விஞ்ஞானிகள் கூடி இருந்தார்கள்… டொக்டர். ஷார்ல்ஸ் பேர்ட் அவர்கள் முன்னிலையில் சிறிது நேரம், ஆழ்மனதின் ஆற்றல்கள் பற்றியும்… மூளையின் விளங்க முடியாத தன்மைகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். அவர்தான் அந்த கழகத்தின் தலைவர். சிறிது நேர உரையின் பின்னர்… ஒரு தளமான கட்டிலில் நேராகப் படுத்திருந்து கண்களை மூடினார்…

சிறிது நேரத்தில் எல்லாம் உடல் தானாக மேல் எழுந்தது… சுமார் 12 உயரம் வரை சென்ற உடல், அப்படியே யன்னல் ஊடாக வெளியேறியது… அனைவருக்குமே திகில் கலந்த ஆச்சரியம்… ஆம், உடல் வெளியேறியது 16 ம் மாடிக்கட்டிடத்தில் இருந்து… எந்த வித பாதுக்காப்பு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை.
ஒரு ஜன்னல் வழியாக வெளியேறிய உடல் அப்படியே இன்னொரு ஜன்னலூடாக உள் நுழைந்து அடுத்த அறைக்குள் சென்று தரையில் இறங்கியது!!!
கண் விழித்த ஹார்ல்ஸ் பேர்ட்… மற்றைய அறையில் இருந்தவர்களிடம்… இடைஞ்சலுக்கு மன்னிக்கவும்… மற்ற அறையில் நாங்கள் ஆழ்மன ஆராச்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்று சாதாரண்மாக சொல்லிவிட்டு தனது கூட்டத்துக்கு சென்றார்.
இந்த சம்பவம்…. ESP துறையில் ஒரு முக்கிய மயிற்கல்லாக அமைந்தது.
இப்படி ஒரு மனிதன் பறபதென்பது இதுவா முதல் முறை? என்ற கேள்விக்கு பதில், இல்லை என்று சொல்லலாம்… அப்போ எப்படி என்பதை பின்னர் பார்ப்போம்.
——————————————————————————————
அடுத்த சம்பவம்…
உண்மையிலேயே ஆச்சரியமானதுதான்… இதுவும் இந்த துறையில் ஒரு மிகப்பெரிய பெளதீக மீறல்தான்…
( சம்பவ இடம்… மற்றும் பெயர்கள் நினைவில்லை… வரும் பதிவுகளில் தேடி உறுதிப்படுத்துகிறேன்… தெரிந்தவர்கள் பின்குறிப்பில் சொல்லுங்கள். )
நீண்டகாலமாக இந்த ESP துறையில் ஆராச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு பிரபல ஆய்வாளர்…. பல விஞ்ஞானிகளையும், அறிஞர்களையும் ஒரு நிகழ்ச்சிக்காக கூப்பிட்டிருந்தார்.
மேடையின் நடுவே இரண்டு தராசும்… மிகப்பெரிய ஒரு பலகை அலுமாரியும் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஆய்வாளர் மேடைக்கு ஒரு இளைஞனையும் அழைத்துவந்தார்.
முதலில், அலுமாரியின் நிறை அளக்கப்பட்டது… கிட்டத்தட்ட 200 kg (?) நிறையைக்காட்டியது தராசு.
அடுத்து அந்த குறிப்பிட்ட இளைஞனை தராசில் ஏற்றினார்கள்… 65 Kg (?) நிறையைக்காட்டியது தராசு.
இதில் ஒன்றும் அதிசயம் இல்லை…. அடுத்து நடந்ததுதான் எல்லோரையுமே உறையவைத்தது.
அந்த இளைஞன் ஒருதராசில் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டான் (கிட்டத்தட்ட தியானிம் செய்வது போன்று.) சிறிது நேரத்தில்… அடுத்த தராசின் நிறைகாட்டி குறையத்தொடங்கியது. அதேவேளை… இந்த இளைஞன் இருந்த தராசின் நிறை காட்டி உயர்வடையத்தொடங்கியது…
மேலும் குறுகிய நேரத்தில்… அந்த அலுமாரி, அந்தரத்தில் மிதந்தது… அதே வேளை இளைஞனின் நிறை 200 kg ஐத்தாண்டியது… அனைவருமே அப்படியே சாக் ஆகிப்போனார்கள் .. 
இப்படி, ஒரு மனிதனால்.. திடீரென தன் நிறையைக்கூட்ட முடியுமா? அதுவும் மிகக்குறுகிய நேரத்தில்… அனைவருமே வியந்தார்கள்… பெளதீகத்தால் விளக்கம் கொடுக்க முடியவில்லை… ஆனால், எமக்குள் பல சக்திகள் பொதிந்துள்ளது என்று மட்டும்… அனைவருமே ஒப்புக்கொண்டார்கள்.
——————————————————————————————
அது இருக்கட்டும்… இப்படி, பாரமான பொருளைத்தூக்குவது , நிறையை அதிகரிப்பது என்பது இதுவா முதல் முறை?
என்றால்… அதற்கு பதிலும் இல்லைத்தான்…

கைகூடக்காதல்....















தனிமையை தனதாக்கி
இரவுகளில் மட்டும் ஏனோ...
இறுக்கியணைத்துக்கொள்கிறது
என்னவளின் நினைவுகள்...
சற்று கணம்...! முற்றும் ரணம் ...!
கைகூடக்காதல்....

இரவு.....!













 
காதலிலும்
காதல் கொள்ளும் காமத்திலும்....
ஊடலிலும்
ஊடல் கொள்ளும் கூடலிலும்....
ஆசையிலும்
ஆசைகொள்ளும் துரோகத்திலும்....
பாசத்திலும்
பாசம் கொள்ளும் வேசத்திலும்.... 

இன்னுமின்னும்
சிலவற்றிலும்
சில கொள்ளும் பலவற்றிலும்....
அர்த்தப்படுகிறதிரவு....
வெறும்
இமையுறக்கத்தில்
மட்டுமா அர்த்தப்படுகிறதிரவு...

என்னவள்..

ஏழுநாள்
பிரிவைத்தாங்காதவள்
வாழ்நாள்
பிரிவைத்தாங்கிக்கொள்ளவாளா....!
இமைக்கும் இடைவெளியிலும்
இடைவெளி இல்லா
உன் நினைவுகளுடன்....

இயல்பானது - காதலும் காமமும் ( 18+)














இயல்பானதை
இயல்பாகேற்றுக்கொள்ளும் மனம்
இயல்பாக
இல்லை போலும்
இவர்களுக்கு .....
இயல்பாகவே இது
இயல்பானதா
இல்லை
இயல்பானது போல
இயற்றப்பட்டதா......
இல்லை
இயல்பானது
இயல்பற்றதானதா எதுவோ
இயல்பானதை
இயற்றி
இன்பற்றிருக்கிறேன் - நான்
இயலாமல் .......

நீ.... !

நீ....
இதழ் பதித்த இடத்தில்
ஈரமே இன்னும் காயவில்லை.....
அதற்குள்....
என் நினைவுகளை
உலர்திட எண்ணுகிறாயே...
அதுமட்டுமாவது என்னுடனே
இருந்துவிடட்டும்
நான் இறக்கும்வரை .....

காதல் கடவுள் துகளா...!











விழியருந்தும் மது
விழியிலிருந்து....
இதழருந்தும் மது
இதழிலிருந்து....
செவியருந்தும் மது
செம்மிசையிலிருந்து...
உடலருந்தும் மது
உள்ளிருந்து....
மனமருந்தும் மது
மாதிலிருந்து.....
அய்யனது அம்மையது
வின்னுமது மண்ணுமது
உன்னதும் என்னதும்
உலகத்தின்னதும்
ஆதியும் அதே...
அந்தமும் அதே...
அதுமட்டும்
ஆக்கும் அழிக்கும்
அதே...!அதே....!!
அது அதுவே.....!!

முகமறியா தோழி















முகப்புத்தக
முகப்பில் உன்
முகமிடாதே....!
என என்
முகமறியா தோழியிடம்
முறையிட்ட தினம் - என்
முகப்பில்
முகமாற்றிய போது
முகமறியா முரண்கள்
முகாமிட்டதேனோ என்
முழுமனதில் -மாறியதென்
முகம் முறையான
முரண்கள் கண்டு....

தேநீரகத்திலோர் தேவலோக மங்கை....

குழப்பத்துடன் குளம்பியேந்தி .....
இதழ் பதிக்கும் இடைவெளியில்
ஈராயிரம் சிந்தனைகள் ....

யாரவள் ....!
நாணத்தோடு
நாணிலேரிய அவள்
விழியம்பு என்னை
இழக்காக்கியதேனோ ....













யாரவள் ....!
மருண்ட கரு
விழிதனில் என்னை
உருட்டியெடுப்பதேனோ ....

யாரவள் .....!
மைவிழியால் என்னை
மையம் கொண்டு
மனமயக்குவதேனோ....

மயங்குவேனா....!!
தேநீரகத்திலோர்
தேவலோக மங்கை....

உயிர்கள் ஜாக்கிரதை ....!!

இது உயிர்களை
பாதிக்கும் நோய் ....!
உயிர்கள் உணர்வுகளின்
காயங்களிலும் வலிகளிலும் சுகம் சுகமென சுகிக்கவைக்கும்
சுகம் சுரக்கும் நோய் -காதல்
உயிர்கள் ஜாக்கிரதை ....!!

காதலும் காமமும் ( 18+)


ஊடல்
கடந்த
கூடல் - உன்
திகட்டாத
செவ்விதழ்தனிலாரம்பம்.....













என்
இதழ்ப்பதிக்காதிடம்
தேடுமுன் தேகம்....

இடையும்....!
இடை
இடையே
துடிக்கும் உன் இதழும்
ஓய்வுக்கல்ல.......!!

நான்
உன்னிலடங்க
ஆண்மையுல் பெண்மையாய்,
உன் வலிமிகும் ....
பெண்மையுல் ஆணாய்,
இறுதியாய்
இருவரும் தோற்போம்....!!

ஊடல்
கடக்கும் தினங்களிலும்...
கூடல் கொள்ளும்
ஓர் வியர்வைக்குளியல்...!!

ஓர் ஊடல்
கடந்த
கூடலில்
காதலும் காமமும் பேரின்பமே ......!!

சுற்றுச்சூழல் தினம் ....!!



நம் வீதி...
நம் ஊர்....
நம் நகர்.....
நம் உலகம்.....
முடிந்த வரை மாசாக்குவோம்....
சுற்றுச்சூழல் தினம் ....!!
ஓரு கேடு....

சாதிகள் ஜாக்கிரதை .....

உடுமலையில்
உயிர் குடித்த சாதிக்கு...
நாங்கள்
வீறுகொண்டெழுமுன்
ஓடி ஒழிந்துகொள்....

தெரிந்துகொள் - உன்
ஆயுதமும் ஆள் பலமும்
எங்கள்
மயிர்க்கு ஓப்பாகும்....

இது முகபக்கத்தில்
சாதியை
முன்னிறுத்தும்
மூடர்களுக்கும்....

இனி இது
தொடர்ந்தால்...
தொடரும்
சாதிகள் கொலை.....

சமூக வயலில்
சாதியெனும்
களைகள் களைய
நாங்கள் தயார்......
சாதிகள் ஜாக்கிரதை .....

"என்னப்பா அங்க சத்தம்"




பதிவிட வேண்டாமென
பதுக்கிய பதிவிது....
உள்ளத்தின்
உறுத்தலினால்
பதிவானதின்று......

பேருந்தில்
அனைவரும் ரஜினிமுருகனில்
லயித்திருந்தனர் - என்
இடதுபுறம் இருக்கையில்
இருவர் மட்டும்
தனியுலகத்தில்....

"என்னப்பா அங்க சத்தம்"
என்று கூடிய கல்லூரி
மாணவர்கள்,

தலையிலடித்திக்கொண்டு
தலை திருப்பிய
தாய்மார்கள்....

இடையிலமர்ந்து
இமைக்காமலிருந்த
குழந்தை....

கண்டும் காணமல்
கடந்து சென்ற
நடத்துநர் ....

சேருமிடம் வந்தால்
சரியென
கண்டுகொள்ளாமல்
காத்திருக்கும்
பயணிகள் ....

அந்த
தனியுலகத்திருவர்
காதல் போர்வையில்
பொதுவெளியில்
புணரும் நாய்களைப்போல்....
#த்த்தூஊ

நாளை
ஒருவேளை -உன்
மகள்....
சகோதரி....
தோழி.....கூட
இச்சமூகசகதியால்
கறைபடலாம்


தோழிகளுக்கு -
பெண்மை என்பது
ஓர் அதிசயம்
அதை ஒருபோதும்
உருக்குலைக்க
சம்மதிக்காதே.......

கறைபடாதிரு
கறைபடுத்தாதிரு.....
சமூகத்தை.....

என்னவளின் நினைவுகள்...

சாட்டையடிபட்டது போல
நெஞ்செல்லாம் ரணமிருக்கு...
வரி வரியா தழும்பிருக்கு....
நித்தமிங்கு பெய்த மழை
உன் நிலம சொல்லியிருக்கு....!
















நித்தம் நிதம் போகும் தேரு....
அதுபாட்டுக்கு போகுதடி...
உள்ளிருக்கும் சாமி மட்டும்
உம்மடியிலியே கிடக்குதடி....!

நெத்தியில வெச்ச முத்தத்தில
உன் உச்சந்தல வாசம்....
உள்ளுக்குள்ள இருக்குதடி ...
எம்மனசு அதநெனச்சு ஏங்குதடி...!

கடைசியா பாக்கனூன...
எனக்கு அது புரியலியே....
இன்னும் பாக்கலியே...
பாக்கவும் வழியில்லையே...!

இனி, நீ சொன்ன சொல்ல
தட்டமாட்ட - ஆனா
இனி எனக்கு சொல்ல
ஆளில்லையே...!

அடிச்சிருந்த,ஏசிருந்தா
என்னதேடி வந்திருப்ப....
அப்பாவோட கண்ணீர்ல கலங்கீட்டியோ...
பாசத்துல பயந்துட்டியோ....!

நீ சாஞ்சபோது நெஞ்சுமேல
பாரமில்ல ஆனா இப்ப நீயுமில்ல
பாரம் ரொம்பா கூடிருச்சே....!

போரும்...! சோரும்....!

 







கதைகதையாய்
கதைக்கும் கல்-வர்கள் ,
கதைக்கிறார்கள் ....
தேசக்காவல் குறித்தும்
தேசக்காப்பு குறித்தும்

உன் கூட்டில்
உண்ண உணவில்லா
உயிர்விடும்
உயிரினையறிவாயோ ....

முடக்க ஒன்று
மடிக்க ஒன்று
முடிக்க ஒன்றென
ஓராயிரம் ஆயுதங்களில்
திரவியம் விரயமாக்கும் மனிதா ....

இப்பாரில்
பசி பசியென
பசி புசிக்கும்
உயிர்களுண்டு ....

Friday, 14 October 2016

தமிழனென்று சொல்லடா....! தலைநிமிர்ந்து நில்லடா.....!!

தமிழனென்று சொல்லடா....!
தலைநிமிர்ந்து நில்லடா.....!!
உன்னை காறியுமிழ்ந்து
கழுவேற்றிடும் வரை .....!











இமைக்கும் இடைவெளியில்
தலையல்ல தலைகள் கொய்யப்படும்....
ஆனால்....! அவன் அகமுகத்திற்கு
முகபூச்சுடன் அவன் வாழ்நாளை
அழங்கரித்துக்கொண்டுருக்கிறான்....

தமிழினம் அறைநிரவாணமாய்....
வண்புணர்வுற்காற்பட்டு துடிக்கிறது....
தமிழனும் துடிக்கிறான்....
முக்குவளை சோற்றுடன்
தொலைகாட்சி நேரலையை
கண்டுகொண்டே....

ஒருவேளை....
உன் இனங்காக்க
பிரியாணி பொட்டலமும்
மதுவும் பணமும்
தேவைப்படுகிறதோ.....!

கொண்டவன் புணர்ச்சிக்கு
ஆயுத்தமாக புண்பட்டுகிடக்கிறது
என் நாடு....
கொண்டவனுக்கும் கவலையில்லை...
கொடுத்தவனுக்கும் கவலையில்லை....

இவ்வண்ணம்...
இப்பயனில்ல பதிவுகளிட்டு
இதைக்கடக்கும் நாம்
மாறி மாறி காறியுமிழ்ந்து கொள்வேம்....
நம் அவலட்சண முகங்களிலே.....