காதலிலும்
காதல் கொள்ளும் காமத்திலும்....
ஊடலிலும்
ஊடல் கொள்ளும் கூடலிலும்....
ஆசையிலும்
ஆசைகொள்ளும் துரோகத்திலும்....
பாசத்திலும்
பாசம் கொள்ளும் வேசத்திலும்....
இன்னுமின்னும்
சிலவற்றிலும்
சில கொள்ளும் பலவற்றிலும்....
அர்த்தப்படுகிறதிரவு....
வெறும்
இமையுறக்கத்தில்
மட்டுமா அர்த்தப்படுகிறதிரவு...
No comments:
Post a Comment