Thursday, 23 February 2017

இந்த அமானுஷ்யம் அப்படின்னா என்ன?

இந்த அமானுஷ்யம் அப்படின்னா என்ன? அப்படின்னு கேட்டா அது என்னான்னு வெளக்க முடியாதுன்னே சொல்லலாம். அதையும் தாண்டி அதப்பத்திப் பேசுனாலே லூசுன்னு நம்மல சொல்லிட்டு போற ஒரு கூட்டத்தயும் நாம பாக்கலாம்.
ஆனா இன்னாதா பெரிய மறுப்பாளனா இருந்தா கூட கீழ வர்ர விஷயங்கள்ள ஏதாவது ஒன்ன அந்த மறுப்பாளன் கடக்காம சத்தியமா போயிடக்க முடியாது. அவ்ளோ எதுக்கு இதப்படிக்கிற நீங்களே கூட அனுபவிச்சிருக்கலாம்.
அத நம்ம பாஷேலேயே அழகா வெளக்கி வரிசப்படுத்தி இருக்காரு நம்ம எழுத்தாளர் சாம் குமார்.
வாங்க நா மொக்க போடுறத நிப்பாட்டிட்டு கதய அவரோட கட்டுறய போடுறேன்.
அதுதான்
உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?! அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா? அதுவும் சும்மா இல்ல, அப்பப்போ நமக்கு “பகீர்…பகீர்” வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்குங்கிறதுதான் உண்மை! உதாரணமா சொல்லனும்னா பேய்/பிசாசு, ஆவி அப்படின்னு நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்.
இப்போ நாம இந்த பதிவுல பார்க்க போறது, அந்த மாதிரி மனிதனால/அறிவியலால கூட விளங்கிக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுககள்/சக்திகளை பற்றித்தான்! சரி, அப்படின்னா முதல்ல மனுஷனிலிருந்தே தொடங்குவோம் நம்ம கணக்கை….
உடல்-மூளை தொடர்பு !
நம் மூளை எப்படி நம்ம உடல பாதிக்குது அப்படிங்கிற விவரத்த, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்காங்க. உதாரணமா சொல்லனும்னா, சில நோய்களுக்கு மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை , நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் “ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே” வெகு காலமா இருந்து வருது! இதுக்கு ஆங்கிலத்துல “ப்ளாசிபோ எஃபெக்ட்”, அப்படின்னு சொல்றாங்க. ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே (மாத்திரை அல்ல). இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது?! அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை!
அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)
உலகத்துல மனுஷனப் பத்தி மனுஷனாலேயே புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்லேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி அப்படிங்கிறது! அதாவது, ஐப்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்/Extra-sensory perception (ESP)). ஆங்கிலத்தில் “இன்டியூஷன்” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து (தீர்கதரிசி) சொல்வது எப்படி? என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால் நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்! இதுல செஞ்ச ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை/கருத்தை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பத்தின ஆய்வு என்னைக்குமே ஒரு தெளிவான முடிவைத் தராது, மனுஷனுக்கு அப்பாற்பட்டது அப்படின்னும் சொல்றாங்க. அப்ப்டின்னா, கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராவேதான் இருக்குமா? தெரியல, காலந்தான் பதில் சொல்லனும்!
இறப்பை ஒத்த அனுபவங்கள்/ இறப்புக்குப் பின் வாழ்வு (புனர்ஜென்மம்?!)
நம்மில் சில பேர், சமயத்துல சாகிற நிலைக்குப் போய் பிழைத்துக் கொள்வதுண்டு. இதப்பத்தி சொல்லும்போது “செத்துப் பொழச்சவண்டா” அப்படின்னு சில பேர் சொல்வதுண்டு. அதாவது சாகும் தருவாய் வரைக்கும் சென்று பின் அதிர்ஷடவசமாக பிழைத்துக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் “Near-Death Experiences”, அப்படின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி அனுபவம் இருக்கிறவங்க, அந்த அனுவபம் பத்தி விவரிக்கும்போது, “ஏதோ பாதாளத்துக்குள்ள போன மாதிரி இருந்தது, உடனே பிரகாசமான வெளிச்சத்துல வந்து, சொந்த பந்தங்களோட இணைஞ்ச மாதிரி ஒரு உணர்வு” அப்படின்னு எல்லாம் சொல்லக் கேட்டிருப்போம் இல்லையா? (குறைந்தபட்சம் சினிமாவுலயாவது பார்த்திருப்போம்!) . அதாவது, கல்லரையையும் தாண்டிய ஒரு உணர்வு/வாழ்வு?! இதுமாதிரி கதைகள்? பல நம்மிடையே இருந்தாலும் இதுவரையில் யாரும் தகுந்த ஆதாரங்களோடு அப்படியொரு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மை! இது ஒருபுறமிருக்க, இந்த மாதிரி ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானிகளோ, இவையெல்லாம் காயப்பட்ட/பாதிக்கப்பட்ட மூளையின் ஒரு வித உணர்வே தவிர இதில் உண்மை என்று எதுவுல் இல்லை அப்படின்னு சொல்றாங்க!
யு.எஃப்.ஓ/UFOs
யு.எஃப்.ஓ என்றால் “அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்” (Unidentified Flying Objects). இத்தகைய பொருள்களை?! பலர் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மை. அதாவது, அப்பப்போ வானத்துல திடீர்னு எதாவது ஒன்னு பறக்கிற மாதிரி தெரியும் (ஏரோப்ளேன் இல்லீங்க!), அது விண்கற்களா/ஏவுகனைகளா அப்படின்னு அடையாளம் சொல்ல முடியாது. அதேசமயம், இது வேற்றுகிரக மனுஷனோட வேலையா கூட இருக்கலாம் அப்படிங்கிறது இன்னொரு விஷயம்! என்னதான் கூர்மையா கவனிச்சி ஆய்வு பண்ணாலும் இது என்னன்னே தெரியாமதான் இருக்கோம் இதுவரைக்கும்?!
தேஜா வு (Deja vu)
“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம். அதாவது, இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்க போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்றாங்க! உதாரணத்துக்கு, ஒரு பெண்மணி புதுசா ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதல்ல வந்து, ஒரு கட்டிடத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறாங்க. ஆனா அங்க, அவங்க வாழ்க்கையில முதல்முதல்ல பார்க்கிறதெல்லாமே முன்னாடியே அவங்க பார்த்து அனுபவிச்ச மாதிரி ஒரு உணர்வு வருது அவங்களுக்கு! இதுதான் “தேஜா வு” அப்படிங்கிறாங்க!” சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் அப்படின்னு சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாவேதான் இருக்கு!
இதுவரைக்கும் நாம பார்த்த விஷயங்கள் சில “கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி” இருந்திருக்கும் உங்களுக்கு. எனக்கும்தாங்க! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம், நம்ம எல்லோருக்கும் ஏதோ ஒரு வயசில அனுபவப்பட்டதா/கேள்விப்பட்டதா இருக்கும்னு நான் நெனைக்கிறேன். என்னன்னு யூகிக்க முடியுதா உங்களால……?!
பேய்/பிசாசு/ஆவி
நம்ம பாரம்பரியத்துல, கலாச்சாரத்துல ஊறிப்போன ஒரு விஷயம்தான் இந்த பேய், பிசாசு, ஆவி எல்லாம். கண்டிப்பா நாம எல்லாரும் அப்பா/அம்மா, பாட்டி/தாத்தா இப்படி நம்ம குடும்பத்தச் சேர்ந்த ஒருத்தர் சொல்லக் கேட்ட ஒரு பேய் கதை கண்டிப்பா இருக்கும். எனக்கு நியாபகம் இருக்கிற வரைக்கும் சொல்லனும்னா, நான் அதிகமா கேட்டது/சினிமாவுல பார்த்தது “வெள்ளையா ஒரு புடவ கட்டிகிட்டு, ஜல் ஜல்னு கொலுசு சத்தம் கேட்கிற மாதிரி நடந்து வர்ர ஒரு பொம்பள பேய பத்தித்தாங்க! அதுக்காக, நான் நெசமாவே அப்படி ஒரு பேயைப் பார்த்தேன்னு எல்லாம் உங்க கிட்ட கப்சா உடறதுக்கு எனக்கு விருப்பமில்லீங்கோ! சரி, நாம மேட்டருக்கு வருவோம். அதாவது, நான் மேல சொன்ன மாதிரி உலகத்தோட எல்லா மூலைகள்ல இருந்தும் இந்த மாதிரி கதைகள் நெறைய சொல்லப்பட்டாலும், சில புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரைக்கும் யாரும் “பேய்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு ஆதாரப்பூர்வமா நிரூபிக்கவேயில்லீங்க சாமி! அது ஒரு அழகிய?! மர்மமாவேதான் இருக்கு!
மர்மமாக மறையும் மனிதர்கள் (Mysterious Disappearances)
பொதுவா மனுஷங்க தொலைஞ்சு போறதும், கொஞ்ச காலம் கழிச்சு திரும்ப கிடைப்பதும்/விபத்தில் இறந்து போவதும் உலகத்துல சாதாரணமா நடக்கிற ஒன்னு! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம் அப்படியில்ல. நெசமாவே, நம்ம கூட இருந்துக்கிட்டிருக்கிற ஒருத்தரு திடீர்னு மறைஞ்சு போறது எப்படி சாத்தியம்? அது எப்படின்னு தெரியாது, ஆனா இது மாதிரி நெறைய நடக்குது (குறைந்தது அமெரிக்காவுலயாவது!). தொலைஞ்சு போனவங்க கெடைச்சிட்டா பரவாயில்ல, ஆதாரம் எதுவுமே இல்லாம, தொலைஞ்சு போறவங்கள பத்தி விசாரனை பண்ணாலும் அவங்க கிடைக்கிறதில்ல அப்படிங்கிறப்ப, அது ஒரு மர்மம்தானே?
ஆறாவது அறிவு/இன்டியூஷன் (Intuition)
நம்ம எல்லாருக்குமே “உள்ளுணர்வு” அப்படின்னு ஒன்னு இருக்குங்கறத நீங்க யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன். அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்துல நாம எல்லாரும் அத உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவுது அப்படின்னு நாம நெனச்சி முடிக்கிறதுக்குள்ள நம்ம குழந்தை கீழே விழுந்து அடிபட்டுடும்/ஒரு விபத்து நடந்திடும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் காரணம், நம்ம ஆழ்மனசுல நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள் பதிஞ்சுபோய், அதுல இருந்து நமக்கே தெரியாம நாம, இப்படி நடக்கப்போவுது அப்படின்னு உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரியுது, “ஏன்” உணர்றோம் அப்படிங்கிற கேள்விகெல்லாம் இன்னும் பதில் தெரியல!
மனிதன் போன்ற மிருகம்/Bigfoot
பல வருஷ காலமா அமெரிக்காவுல, பெரிய, அடர்த்தியான முடியோட, மனுஷன்மாதிரியே இருக்கிற “பிக்ஃபூட்”, அப்படிங்கிற மிருகத்தப் பார்த்ததா நெறைய பேர் சொல்லியிருக்காங்க! அப்படி அந்த மாதிரி மிருகங்கள் இருந்து, இனப்பெருக்கம் செஞ்சுகிட்டிருந்தா குறைந்தது ஒன்னையாவது, இல்லன்னா அதோட ஒரு பிணத்தையாவது கண்டுபிடிச்சிருக்கனுமில்ல இதுவரைக்கும்?! ஆனா அப்படி ஒன்னையும் இதுவரைக்கும் கண்டும் புடிக்கல, வேட்டையாடவும் இல்லங்கறதுதான் உண்மை! வெறும், கண்ணால் கண்ட சாட்சி, புரியாத போட்டோ மட்டும் வச்சுகிட்டு அந்த மாதிரி ஒரு மிருகம் இருக்குன்னு சொல்றதுல எந்த யதார்த்தமும் இல்ல அப்படின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! இதே மாதிரி, நம்மூர்ல ஒரு குறங்கு மனிதன்?! கோயம்பத்தூரைச் சுற்றியுள்ள காடுகள்ல?! இருக்கிறதா, ஆனந்த விகடன்ல ஒரு கட்டுரை படிச்சதா எனக்கு ஒரு நியாயபகம்?! உங்களுக்கு யாருக்காவது நினைவிருக்கிறதா? இருந்தா கொஞ்சம் சொல்லுங்க!
டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum)
அமெரிக்காவுல, நியூ மெக்சிகோவுல இருக்கிற ஒரு சின்ன நகரத்துக்கு பேருதான் டாவோஸ் (Taos). இந்த நகரத்தச் சேர்ந்த சில மக்கள் பல வருஷமா, யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிற மாதிரியே தூரத்துல ஒரு சத்தம் கேட்டுகிட்டு இருக்கிறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க! ஆனா வெறும் 2 விழுக்காடு மக்கள்தான் இதச் சொல்றாங்களே தவிர, மத்தவங்கள்லாம் இது ஏதோ ஒலி அலைகள்னால ஏற்படற ஒரு சத்தம்தானே தவிர, வித்தியாசமான முனுமுனுப்பு எல்லாம் இல்லங்கிறாங்களாம். எது எப்படியோ, அது என்ன சத்தம்னு இதுவரைக்கும் யாராலயும் உறுதியாச் சொல்லமுடியலயாம்

நெற்றிக்கண் - ஞானசுரபி - Pineal Gland

மனித இனம் இழந்து கொண்டு இருக்கும் ஒரு சக்தியே இந்த Pineal Gland . சித்தர்கள் , யோகிகள் அந்த காலத்தில் அடைந்த யோகத்தை என் இன்று மனிதானால் அடைய முடியவில்லை ? என்றாவது யோசித்து உள்ளீர்களா ?
அன்று சித்தர்கள் செய்த விடயங்களையே இன்று வரை ஆச்சரியமாக அமானுடமாக பேசிக்கொண்டு இருக்கிறோம் .ஏன் இன்று நம்மால் அந்த நிலையை அடைய முடியவில்லை ?
Image result for  Pineal Gland

Pineal Gland இந்த சுரபி மனிதனின் நெற்றி போட்டு மத்தியில் மூளையின் உள்ளே உள்ள சிறு பாகம் .இந்த சுரபியை தான் சிவனின் நெற்றி கண்ணாகவும் , புத்தினின் ஞானமாகவும் மற்றும் பல புராணங்களில் மறைமுகமாக கூறி உள்ளனர் . உணவுகட்டுபாடு , தியானம் , மனதை ஒரு நிலை படுத்துதல் , முச்சு பயிற்சி போன்ற வற்றை கைபற்றிவந்தால் இந்த சுரபி தானாக வேலை செய்ய துடங்கும் .. உடம்பில் உள்ள மற்ற சக்கரங்களும் இதனுடன் இணைந்தே உள்ளது .. ஆங்கிலத்தில் இதை "Soul Seed "என்று அழைப்பார்கள் அதாவது ஆன்மாவின் விதை . இந்த pineal gland உறுப்பின் முலமே நாம் நமது ஆன்மாவை அடைய முடியும் (Energy Body ). சுருக்கமாக சொல்ல போனால் மதங்கள் அனைத்தும் நாம் தான் கடவுள் என்ற பெரிய உண்மையை மறைக்க உருவாக்கப்பட்டவையே .
Image result for Pineal Gland
சித்தர்கள் உணவு உண்ணாமல் , பருகாமல் உயிர்வாழ்ந்ததின் ரகசியம் பிரபஞ்ச ஷக்தி .. இந்த பிரபஞ்ச ஷக்தி நாம் துங்கும் பொழுது நம் உச்சன் தலை மூலம் இறங்கி நம் உடல் முழுவதும் பரவும் .. இது போதிய அளவில் நம்மால் பெற முடியாததாலே தான் நாம் வேறு உணவுகளை நாடி செல்கிறோம் . இந்த பிரபஞ்ச சக்தியை அதிக அளவில் அடையும் வழி தான் தியானம் .
நாம் நமது ஆன்மாவில் இருந்து இந்த உலகிற்கு இந்த உடலில் ஒரு அனுபவத்திற்க்காக வந்துள்ளோம் . நமது உண்மையான உடல் நினைவுகள் அனைத்தும் அந்த ஆன்மாவிலேயே உள்ளது .இந்த Pineal GLand மட்டுமே நமது திட உடலுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள ஒரு வழி பாலம் என்று கூட சொல்லலாம் .. இந்த பாலம் சிதைக்க பட்டால் ?
இந்த Pineal Gland மூலம் தான் நம்மால் அடுத்த பரிணாமத்தை அடையமுடியும் (உண்மையான மேம்பட்ட பரிணாமம் என்று கூட சொல்லலாம் ) . இது தான் மனித குலத்தின் குறிக்கோளை அடைய ஒரே வழி .
Image result for Pineal Gland
என்ன ஆயிற்று இன்றைய மனிதனின் Pineal Gland ?உலக அரசுகள் ( அதன் பின்னிருக்கும் இல்லுமினாட்டி )நமது உணவு பொருள்களில் நஞ்சை கலந்தது இந்த pineal gland ஐ முடக்க பார்க்கின்றன .. இந்த Pineal GLand இன் எதிரி FLuride என்னும் வேதி பொருள் .. உடலில் எந்த இடத்தில் நீங்க Fluride இருந்துகொன்டாலும் இந்த pinealgland அதை ஈர்த்துகொள்ளும் ..பிறகு Pineal Gland இதனால் பாதிக்கப்படும் . இந்த FLuride அமெரிக்கனாட்டின் குடி தண்ணீரில் பரவலாக கலக்கபடுகிறது , நாம் பயன் படுத்து பல பொருள்களில் மறைமுகமாக கலக்கப்பட்டு அதை சிதைவுற செய்கிறார்கள் குறிப்பாக நமது பற்பசையில் (toothpaste ) இல் இது அதிக அளவுகளில் கலக்க படுகிறது .
DMT - Dimethyltryptamine
இது உலகின் அனைத்து நாடுகளிலும் தடை செய்யப்பட்ட ஒரு போதைப்பொருள் .. அதுவும் அமெரிக்க நாட்டில் Class -1 ரக போதை பொருள் .. இதை பயன்படுத்தினால் பேச்சே கிடையாது உங்களை கைது செய்து விடுவார்கள் .. அவ்வளவு பெரிய போதை பொருளா என்று எண்ணாதீர்கள் ..
இந்த வேதி பொருள் உலகில் உள்ள எல்லா உயிரினங்களிலும் உள்ளது முக்கியமாக தாவரங்கள் . ஆழ்ந்த தியானத்தின் பொழுது நமது Pineal gland சுரக்கும் ஒரு வேதி பொருளே இந்த DMT .
ஆம் இயல்பாக சுரக்க வேண்டிய திறனை இல்லுமினடிகள் சூழ்ச்சியால் உணவு பொருள்களின் மூலம் குறைத்து விட்டார்கள் .
அதே போல் நமது பாரம்பரிய தானியங்களையும் அழித்து மரபணு மாற்றப்பட்ட விதிகளையும் , காய் கனிகளையும் அளித்து பசுமை புரச்சி என்ற பெயரில் தாவரங்கள் மூலம் நமக்கு வரவேண்டிய Dimethyltryptamine யை தடுத்து விட்டார்கள் .
எனவே இன்னும் 2,3 தலை முறைகளுக்கே இந்த PIneal gland மனித இனத்திற்கு ஓரளவு செயல்திறனுடன் இருக்கும் . அதன் பின் வரும் மனித இனத்துக்கு appendix சதை போல தேவை ஆற்ற பொருளாகி விடும் .
இந்த DMT யை தயார் செய்து உட்கொண்டால் என்ன நடக்கும் ?
அமெரிக்க பழங்குடியினர் அதிலும் Shamans (பேய் ஓட்டுபவர்கள் ) வேறு உயர்நிலை உயிர்களிடம் தொடர்பு கொள்ள பயன்படுத்தி உள்ளனர் .
இந்த DMT யை சிலருக்கு கொடுத்து ஆராய்ச்சிகள் நடத்த பட்டது அவர்கள் அனைவரும் ஒரே வகையான அனுபவத்தை அடைந்ததாக கூறுகிறார்கள் .
வேறு ஒரு உயிரினங்களை கண்டோம் , ஒரு சிலர் புத்தர் ,மற்றும் சில கடவுள்களை கண்டதாகவும் கூறி உள்ளனர் அது போதை என்று ஒதுக்கி விட முடியாது . யோசித்து பாருங்கள் அந்த காலத்தில் சித்தர்கள் கடும் தவத்தின் முலமே கடவுள்களை உணர்ந்துள்ளனர் .கடம் தவம் இந்த வேதி பொருளை தான் மூலையில் உற்பத்தி செய்கிறது .
இந்த DMT தொட்டாசினுங்கியின் வேர்களில் அதிக அளவில் உள்ளது .
இந்த அறிய உறுப்பை கொண்ட கடைசி தலைமுறை நாமாக கூட இருக்கலாம் .. மீடியா வில் காட்டப்படும் பல என்னசிதரல்களை தவிர்த்து தியானத்தை கடை பிடித்து , இயற்க்கை உணவுகளை உண்டால் நாமும் அந்த நிலையை அடியலாம் .
நாம் தான் கடவுள் என்று உணர்வோம் .

கொங்கலா (Kongka la)

உலகில் பல் வேறு பகுதியில் நடக்கும் அமானுஸ்யம், வினோத நிகழ்வுகள் பலவற்றை நாம் படித்து வைத்திருப்போம்,
ஆனால் நமது நாட்டில் அப்படி நடக்கின்ற 
சில வினோத விடயங்களை பற்றி சிலர் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை 
அச்சிலர் காண பதிவு :https://www.youtube.com/watch?v=APP1VxXX77g
கொங்கலா (Kongka la ) : https://www.youtube.com/watch?v=pN4oviFsF_0

https://www.youtube.com/watch?v=WX72EOkTUDI
-இந்திய சீனா எல்லையில் இன்றும் சர்ச்சைக்குரிய இடமாகவும் பலரின் வாதத்திற்கும் உள்ளது...



காரணத்தை கீழே பார்ப்போம்:
கொங்க லா , இங்கு தான் 1962 ஆம் ஆண்டு
இந்தியா வும் சீனா வும் கடும் போர் புரிந்தது.
அதன் பின் இரு நாடும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த இடத்தை கைவிட்டது.
பின்பு சில வருடங்கள் கழித்து அந்த பகுதியில் பல விசித்திர நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தது.அங்கு வசிப்பவர்கள் அடிக்கடி வானத்தில் முக்கோண வடிவில் விளக்குகள் மிதப்பதையும் பறப்பதையும் பார்த்து கலவரத்துக்கு உள்ளாயினர்.
சிலர் அதை தெய்வ ஒளி என்றும், சிலர் அதை பார்த்து பயந்து புகார் அளிக்க ஆரம்பித்தனர்.
பல புகார்களுக்கு பின், 2004 ஆம் ஆண்டு
Space research application மையத்தில் பணிபுரியும் Dr.அணில் குலகாரணி யின் தலைமையில் ஒரு குழு அந்த இடத்தை ஆராய்ச்சி செய்ய புறப்பட்டது.
பல நாட்கள் அராய்ச்சிற்கு பின் அந்த குழு இயந்திர வடிவில் 4 அடியில் ஒரு உருவம் நகர்ந்து மறைவதை படம் புடித்தனர். அது அந்த குழுவை மிரட்சிக்குள்ளாக்கியது.
அதன் பின் பல் வேறு காரணங்களால், அந்த ஆராய்ச்சியை கிடப்பில் போட்டது அரசாங்கம்.


அதன் பின் ஆகஸ்ட் 1 இல் இருந்து அக்டோபர் 15 க்கு இடையில் இந்தோ-திபெத்தின் எல்லையில் உள்ள காவல் படையும், இந்திய இராணுவமும் ஜம்மு காஷ்மீர் யின் பகுதியில் உள்ள "லடாக்" என்னும் இடத்தில நூற்றிக்கும் அதிகமானா பறக்கும் தட்டை பார்த்து மிரண்டனர்.
பின் இதை இந்திய இராணுவமும் அரசாங்கம் மீண்டும் ஒரு குழு
அமைத்து ஆராய்ச்சி செய்ய அனுப்பியது.
செப்டம்பர் 2012 ஆம் ஆண்டு அந்த ஆராய்ச்சி குழு " பங்காங் ஏரியில் " பார்த்தது அவர்களுக்கு ஆச்சரியத்தையும் பயத்தையும் தந்தது.
அவர்கள் பார்த்தது ரிப்பன் வடிவில் உள்ள ஒரு
பறக்கும் தட்டு.
உடனே அரசாங்கம் விழித்து கொண்டு விடயத்தின் முக்கியத்துவத்தையும், அபாயத்தயும் புரிந்து கொண்டு,
நாட்டில் உள்ள அறிவியல் ஆராச்சியாளர்கள் பலரை அங்கு அனுப்பியது.
இது வரை தான் அரசாங்கம் வெளியே தெரிவித்தது.
அதன்பின் அந்த தட்டிற்குள் என்ன இருந்தது,
அதை எனா செய்தார்கள் என்பதை இன்று வரை, ரகசியமாகவே வைத்துள்ளனர்.
அங்கு இந்தியா வும் சீனா வும் ரகசிய தளம் ஒன்றை அமைத்து உள்ளதாகவும், அங்கு "வேற்றுகிரகவாசிகள்" ஐ வைத்து ஆராய்ச்சி செய்வதவாகவும் சிலர் கூறுகின்றனர்.
அந்த சிலர் கூறும் கூற்றுக்களை உறுதியாக்கும் படி இந்தியா வும் சீனா வும் சேர்ந்து அந்த பகுதியில் தளம் ஒன்றை அமைத்து வேலிகள், பாதுகாவலர்கள் ஐ வைத்து எதோ செய்து வருகின்றனர்.
இன்றும் கைலாச மலைக்கு செல்லும் புத்த பைத்துக்களும், சுற்றுலா பயணிகளும் அந்த தளம் அமைந்திருக்கும் இடத்துக்கு செல்லவோ பார்ப்பதற்கோ பாதுகாவலர்கள் அனுமதிப்பதில்லை.
அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரித்தால், அங்கு அடிக்கடி பல பறக்கும் தட்டுகள் அந்த தளத்திற்கும் சென்று வருவதாகவும் அது அவர்களின் தினசரி வாழ்க்கைக்கு பழகிவிட்டதாகவும் கூறி கேட்போரை மிரட்சிக்கு உள்ளாகிறார்கள்.
எது எப்படியோ அங்கு என்னதான் நடக்கிறது என்பதை காலம் பதில் சொல்லும்,
கண்டிப்பாக அந்த பதில் அனைவரையும் ஆச்சரியம் முட்டுவதாக தான் இருக்கும்.

யாளி....!?

யாளி - இந்த சொல்லை கேள்வியுற்றிருப்பீர்கள். இது ஒரு விலங்கா?இயந்திரமா? அல்லது கற்பனையா..!
Image may contain: one or more people
யாளி தென்னக இந்து கோவில்களில் காணப்படும் இவற்றின் சிற்பங்களை காணாமல் கருவறைக்கு செல்ல வாய்ப்பில்லை. ஆனால் யாளி என்பது பெரும்பாலானோரால் இந்துக் கோயில்களில் காணப்படும் ஒரு கற்பனை உயிரினச்சிற்பமாகவும் கருதப்படுகிறது. ஆனால்
No automatic alt text available.
வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும் ….
– நக்கண்ணையார், அகம். 252
No automatic alt text available.
அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கத்தே விழுவதை ஒருபோதும் அறியாத வெற்றியை உடைய வேட்டைக்குச் செல்லும் வாள் போன்ற
வரிகளையுடைய புலியானது நடுங்குமாறு, ஆளியானது பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவூட்டும் உறுப்புடன் காணப்படும் யாளி, குமரி கண்டம் என்ற லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகம் என்றும் நம்பப்படுகிறது. யாளி காட்டில் வாழும் விலங்கு என்றும், அது புலியைக் கொல்லும் என்றும், யானையை அது தன் நகங்களால் பற்றி இழுக்கும் என்றும் அதன் ஆற்றலை விளக்குகிறது. யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் தலைகளோ வேறு ஒரு விலங்கின் சாயலில் வடிவமைக்கப்படுகின்றன. யானை, சிங்கம் (சிம்மம்), ஆடுகளின்(மகரம்) தலைகளையும், அரிதாக நாய், எலிபோன்றவற்றின் தலைகளையும் யாளியிடம் காணலாம்.
பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்
சிம்ம யாளி
மகர யாளி
யானை யாளி.
யாளிகள் கோவில்களை பாதுகாப்பதுமாகவும் மக்களை ஆலயத்திற்கு வழிநடத்துவதாகவும் நம்பப்பட்டது.
முதல் கோணமான விலங்கு :
நம் தமிழ் வரலாற்றில் யாளிகள் யானையின் உயரத்தை விட ௩, ௫ (3,4) மடங்கு உயரமாக இருந்துள்ளது. ஏனெனில் சிற்பங்களில் யானையை விட பெரிய அளவிலும், அதன் மேல் இருந்து யானையை ஆதிக்கம் செலுத்தும் வகையில் உள்ளது. இது அன்றில் பறவை போலவும், அனிச்சம் செடியினம் போலவும் வாழ்ந்து மறைந்துபோன உயிரினம் ஆகும்.
எனவே முற்காலங்களில் காணப்பட்டு அழிந்த இனமான டையனோசர்களாகவும் கருதப்பட வாய்ப்புள்ளது, இன்னும் பல அறிஞர்கள் இவற்றை பாண்டியர்களின் டையனோர்களாகவும் குறிப்பிடுகின்றனர்.
ஏனெனில் தமிழ் மன்னர்களின் மூவேந்தர்களில் பழமையான பாண்டியர்களே லெமூரியாவை ஆட்சி புரிந்தனர். ஆகவே இவை லெமூரியாவில் வாழ்ந்து அழிந்த இனமாகவே கருதப்படுகிறது. இதன் உண்மையை மட்டுமல்லாமல் நம் தமிழ் வரலாற்றை உலகிற்கு அறிந்து கொள்ள செய்ய இயலாமலும், அகழ்வராய்வுகளை தடுக்கும் நோக்கிலேயே இந்திய அரசு செயல்படுகிறது.
அடுத்த கோணமான இயந்திரம்:
நம் அறிவியலில் இவை வேற்றுகிரக வாசிகளின் வாகனமாகவும் (ufo, flights) இருந்திருக்கலாம்,
நம் யாளிகள் கடவுளின் பாதுகாவலனாகவும் ( ஆலயங்களில் இந்த பாதுகாவலர்களை கடக்காமல் கடவுளை காண இயலாது) இருக்கிறது. மேலும் இந்து கடவுள்களுள் தேவர்களின் தலைவனான இந்திரனின் வாகனம் ஐராவதம் ( யானை). அது மிக நீண்ட ௪ (நான்கு)தந்தங்களை உடையதாகவும், வானில் பறந்து செல்ல ஏதுவாக இறக்கைகளையும் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், யாளியின் உருவத்தை ஒத்ததாகவும் காணப்படுவதால், வேற்றுகிரக வாசிகளின் பறக்கும் இயந்திரமாகவும் இருந்திருக்கலாம். ஆகவே அவற்றை கண்ட அன்றைய மக்கள் அதிசக்தி படைத்த அவற்றை தங்கள் கடவுளின் பாதுகாவலனாகவும், அந்நாளில்
மனிதனை அச்சுறுத்தம் கொடும் மிருகங்களான சிங்கம், புலி, யானைகளை அடக்கி அதிகாரம் செய்வதாக தங்களது சிற்பங்களில் காட்டியுள்ளனர்.
இந்த யாளியை அறிவியல் பூர்வமாகவோ, உண்மை பூர்வமாகவோ காண்பது உங்களின் முடிவு.
நம் தமிழ் மக்கள் அறிவியலிலும், கற்பனை வளத்திலும், வீரத்திலும் சிறந்து விளங்கியதை நாம் அறிவோம். இன்னும் நம் தமிழர் வரலாற்றை தேடி செல்லும் தேடலாய்.

‘பெல்மேஷ்’முகங்கள்

ஸ்பெயின் நாட்டில் ‘பெல்மேஷ்’ (Belmez) என்றொரு கிராமம் இருக்கிறது. மிகவும் அமைதியான ஒரு கிராமம் அது. ஆனால், இந்த அமைதியெல்லாம் 1971ம் ஆண்டு வரைதான். 1971ம் ஆண்டு பெல்மேஷ் கிராமத்தில் இருந்த ஒரு வீட்டில் திடீரென நடந்த தொடர் சம்பவங்களால் அந்தக் கிராமமே கிலி பிடித்தால் போல மாறிவிட்டது. எங்கே இருக்கிறது என்று யாருக்குமே தெரியாத பெல்மேஷ் கிராமத்தைப்பற்றி உலகமே பேச ஆரம்பித்த சம்பவங்கள் அவை.

1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி, பெல்மேஷ் கிராமத்தில் ‘Calle Real’ என்னும் தெருவில் அமைந்த 5ம் நம்பர் வீட்டில் வசித்து வந்த பெண்மணியான மரியா கொமேஷ் (Maria Gomez), சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த பொழுது, தற்செயலாகச் சமயலறையின் நிலத்தைப் பார்க்க நேர்ந்தது. அங்கு தெரிந்தது என்னவென்று முதலில் அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. சற்று உற்றுக் கவனித்த போதுதான் ‘அட! இது ஒரு பெண்ணின் உருவமல்லவா?’ என்று மனதுக்குள் தோன்றியது. லேசாக ஒரு பயமும் தொற்றிக் கொண்டது. நிலத்தில் தெரிந்த படம் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. ரொம்பவும் மங்கலாகத் தெரிந்தது. ‘சரி, இதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம். 

இப்படிச் சில சமயங்களில் சுவர்களிலும், முகில்களிலும் உருவங்கள் போல தெரிவதாக நாம் நினைத்துக் கொள்வதில்லையா? அதுபோல ஒன்றுதான் இது!’ என்று அலட்சியப்படுத்திவிட்டுப் படுக்கச் சென்றுவிட்டார். ஆனால், மறுநாள் எழுந்து வந்து சமையலறையைப் பார்த்தவருக்கு நடுக்கமே வந்துவிட்டது. நேற்றுப் பார்க்கையில், மிகவும் மங்கலாகச் சில கோடுகளால் வரையப்பட்டிருந்த ஒரு பெண்ணின் முகம், இன்று நல்ல தெளிவான முகமாக மாறியிருந்தது. அலறியடித்தபடி கணவனையும், மகனையும் அழைத்துக் காட்டிய போது, அவர்களும் கொஞ்சம் நிலைகுலைந்துதான் போனார்கள். ஆம்! மரியா கொமேஷ் அவர்களின் வீட்டின் சமையலறைத் தரை நிலத்தில், வித்தியாசமான வடிவத்தில் உள்ள பெண்ணொன்றின் முகம் வரையப்பட்டிருந்தது. வரையப்பட்டிருந்தது என்றால், சாதாரணமாக நாம் வரைவது போல சாயங்களைப் பயன்படுத்தியோ, வரையும் ஏதாவது கருவிகளைப் பயன்படுத்தியோ கிடையாது. ஒரு சாதாரண சீமெந்து நிலத்தில் ஏற்படும் கீறல்கள், வெடிப்புகளால் சில உருவங்கள் போல நமக்குத் தெரியுமே, அது போல வரையப்பட்டிருந்தது. ஆனால் மிகத் தெளிவாக ஒரு பெண்ணின் முழுமையான முகத்தின் படம். கணணி மூலமாக ஏற்படுத்தப்படும் விசேச எஃபக்டுகள் (Effect) போல, மிக மங்கலாகத் தெரிய ஆரம்பித்துப் பின்னர் படிப்படியாக முழுமையாய் வரைந்தது போல மாறும் படம். இப்படி மாறுவதற்குச் சில நாட்கள் எடுக்கும்.

வழக்கம் போல, ‘இதை யாரோ வரைந்துவிட்டுத் தங்களுடன் விளையாடுகிறார்களோ?’ என்றே மரியாவும், அவரது குடும்பத்தினரும் நினைத்தார்கள். அப்போதுதான் அடுத்த ஆச்சரியம் ஆரம்பித்தது. எப்படி இந்தப் படம் மங்கலாகவிருந்து பின்னர் தெளிவான படமாக மாறியதோ, அதேபோல, தெளிவாக இருந்த முகம் மீண்டும் மங்கலாக மாறத் தொடங்கி அப்படியே மறைந்தும் போனது. ‘அப்பாடா!’ என்று நினைத்தவர்களுக்கு அடுத்த நாளே, மேலுமொரு இடி காத்திருந்தது. அதே சமையலறையின் தரையில் வேறொரு படம் தோன்ற ஆரம்பித்தது. மரியாவின் கணவர் யுவான் பெரைராவும் (Juan Pereira), மகனும் திகைத்துப் போனார்கள். இந்தப் படமும் படிப்படியாகத் தெளிவான படமாக, கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மாறியது. யாரோ வரைந்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் என்று கொஞ்சம் சமாதானமாக இருந்தவர்களுக்கு இது கிலியையே ஏற்படுத்தியது. இப்படியானதொரு அதிசயத்தை, இல்லை.. இல்லை… அதிசயமே கிடையாது. இப்படியானதொரு பயங்கரத்தை அவர்கள் இதுவரை பார்த்ததேயில்லை.
பெரைராவும், மகனும் என்ன செய்வதென்று யோசித்தார்கள். ஊரில் யாரிடமும் சொல்லிப் பிரச்சனையை ஏற்படுத்த விரும்பவில்லை. கடப்பாரை ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அப்படியே, சமையலறை நிலத்தின் சீமெந்துத் தரையை உடைத்து வெளியே எறிந்தார்கள். புத்தம் புதிதாக ஒரு தரையை அங்கு அமைத்தார்கள். முடிந்தது கதை. கையைத் தட்டிவிட்டுச் சந்தோசமாகச் சென்று உறங்கினார்கள். அடுத்த நாள், அதற்கு அடுத்தநாள் என்று எதுவும் நடக்கவில்லை. ‘சரி, அந்தப் பழைய சீமெந்துத் தரையில்தான் ஏதோ கோளாறு. அந்தச் சீமெந்துக் கலவையில் உள்ள பிரச்சனையால்தான் இந்த உருவங்கள் தோன்றியிருக்கின்றன. தற்செயலாக அவை மனித முகங்கள் போலக் காட்சியளித்திருக்கின்றன’ என்று மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். மகிழ்ச்சி அடுத்தநாள் வரைக்கும்தான். புதிய சீமெந்துத் தரையில் மீண்டும் புதிய முகங்கள். பயந்தே போனது பெரைரா குடும்பம். திட்டவட்டமாக, ‘இது பேய்தான்’ என்ற முடிவுக்கே வந்தது அந்தக் குடும்பம். மெல்ல மெல்ல ஊருக்குள் கதை பரவ ஆரம்பித்தது. வீட்டை நோக்கிப் படையெடுத்தனர் மக்கள். எப்போதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த வீட்டில் நடக்கும் அதிசயத்தைப் பார்க்க ஆரம்பித்தார்கள். யார் வந்தாலும், யார் பார்த்துக் கொண்டிருந்தாலும், படங்கள் தோன்றுவதும் மறைவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன.

பயந்து போன பெரைரா ஊர் மேயரிடம் சென்று, ‘தங்களை இந்தச் சிக்கலிலிருந்து காப்பாற்றும்படியும், இந்தப் படங்கள் தோன்றுவதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்கும்படியும்’ கேட்டுக் கொண்டார். பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவணங்கள் என மரியா வீடே கலேபரமானது. நம்மூர்ப் பேய்கள் போல இல்லாமல், பெல்மேஷ் பேய் கள் கொஞ்சம் வித்தியாசமானவையாக இருந்தன. நம்முர்களில் பேய்கள் இருக்கின்றன என்று பத்திரிகைகளோ, தொலைக்காட்சிகளோ அந்தக் குறித்த இடத்துக்குச் சென்று அந்த இரவு தங்கி ஆராயும் போது, பேய்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு அந்தப் பக்கமே எட்டிப்பார்க்காது. ஆனால் பெல்மேஷ் பேய்களுக்கு, இந்த ஊடகத்தினரைக் கண்டு பயமே இருக்கவில்லை. அவர்கள் இருக்கும் போதே முகங்கள் தோன்றியது நடந்தது. இது மிகவும் வினோதமாகவும் தெரிந்தது. தெளிவாக அனைத்தையும் படம்பிடித்துக் கொண்டனர். வீட்டிற்கு பார்வையாளர்களாக வரும் பொது மக்களில் பலரும் போட்டோக்களை எடுத்துத் தள்ளினர். இது தொடர்ச்சியாக நடந்தபடியே இருந்தது. எவ்வளவு காலத்துக்கு நடந்தது தெரியுமா? முப்பது வருடங்களுக்கு மேலாக நடந்தது.
தனது 85வது வயதில், 2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மரியா கொமேஷ் அவர்கள் இறக்கும்வரை, அந்த வீட்டின் தரையெங்கும் முகங்கள் தோன்றிக் கொண்டேயிருந்தன. சமையலறையில் ஆரம்பித்து, வீட்டின் பல இடங்களிலும் முகங்கள் முகங்கள் முகங்கள்தான். இதனாலேயே இந்த மர்மச் சம்பவத்திற்கு ‘The Faces of Belmez’ என்ற பெயரும் வந்தது. ஆண்கள், பெண்கள் ஆகிய இரண்டு முகங்களும் மாறி மாறித் தோன்றின. சமயங்களில் கூட்டமான முகங்களும் தோன்றின. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முக பாவனைகள் அந்த முகங்களில் தெரியும். பலவித உணர்ச்சிகளை அந்த முகங்கள் வெளிப்படுத்தின. தொடர்ச்சியாக அந்த வீட்டில் முகங்கள் தோன்றியதாலும், தன் சொந்த வீட்டைவிட்டு வேறு எங்கும் போக விருப்பமில்லாததாலும், அங்கேயே இருந்தார் மரியா. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் பின்னர் அதுவே பழகிவிட்டிருந்தது. ஆனால், ஒரேயொரு நிம்மதி மட்டும் இருந்தது. படங்கள் தோன்றுவது மட்டும்தான், வேறு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இது பற்றிப் பேசிப்பேசி ஓய்ந்துபோயின. 30 வருடங்கள் அதே செய்தியைத் திருப்பித் திருப்பி போடுவதில் என்ன இருக்கு சொல்லுங்கள்? ஆனால், நீங்கள் நினைக்கும் விசயமும் நடந்தது. இந்தச் சித்திரங்களைப் பெரைரா குடும்பத்தில் ஒருவரே வரைந்துவிட்டு, உலகை ஏமாற்றுகிறாரோ என்றும் நினைக்கத் தொடங்கினார்கள் சிலர். அறிவியல் ஆராய்ச்சிகளும் ஒருபுறம் ஆரம்பித்தன.
சித்திரங்களின் இருந்த இடங்கள் சுரண்டப்பட்டு இரசாயனச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. பேரியம், காரீயம், குரோமியம், செம்பு, பொஸ்பரஸ் போன்றவற்றின் கலவை அதில் காணப்பட்டன என்று பதிலும் வந்தது. மரியாவை ‘லை டிடெக்டர்’ என்னும் பொய் அறியும் கருவி கொண்டும் ஆராய்ந்தார்கள். ஆனால் மரியா சொன்னது அனைத்தும் உண்மைதான் என்றே முடிவு வந்தது. தடயவியலாளர்கள், மனவியல் மருத்துவர்கள் என அனைவரும் படையெடுத்தனர். அனைத்துச் சோதனைகளுக்கும் பெரைரா குடும்பம் ஒத்துழைத்தது. யாராலும் சரியான உண்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையொட்டிப் பலவித விவாதங்கள் ஸ்பெய்ன் நாடெங்கும் நடைபெற்றன. வழமை போலச் சொல்லப்படும் காரணங்கள் அனைத்தும் சொல்லப்பட்டன. மேலே சொல்லப்பட்ட கலவைகளை மிகச் சரியான விகிதங்களில் கலந்து சீமெந்தில் பூசினால், அப்படி வரைந்த படம் உடன் தெரியாது என்றும், படிப்படியாக தெரிய ஆரம்பிக்கும் என்றும், பின்னர் தானாக மறைந்துவிடும் என்றும் சொன்னார்கள். இப்படிப் படங்கள் தோன்றுவதற்கு என்ன விதமான காரணங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறார்களோ, அவ்வளவு காரணங்களையும் சொன்னார்கள். சிலர் ஒருபடி மேலே போய், மனதின் உள்ளே நினைக்க வெளியே படங்களை உருவாக்கக் கூடிய Thoughtography என்னும் சக்தி மரியாவுக்கு உண்டு என்றும், அதன் மூலமாகத்தான் அவர் இந்தச் சித்திரங்களை வரைகிறார் என்றும் சொன்னார்கள். எல்லாமே சொன்னார்கள், எதற்கும் ஆதாரமிருக்கவில்லை. அனைவருமே தங்கள் கல்வியின் மேன்மையை வைத்து ஒவ்வொரு விதமான கருத்தைச் சொல்வார்கள். ஆனால் பெரும்பாண்மையான மக்கள் இதை, ஒன்று அல்லது பல அமானுஷ்ய சக்திகள்தான் உருவாக்குகின்றன என்று திடமாக நம்பினார்கள். பேய்கள் போன்ற அமானுஷ்ய சக்திகள்தான் இவற்றை உருவாக்குகின்றன என்னும் பக்கத்திலிருந்தும் ஆராய்ச்சிகள் நடந்தன. இந்த வீடே 500 வருடங்களுக்கு முன்னர் சவக்காடாக இருந்த இடத்தின் மேல்தான் கட்டப்பட்டிருக்கிறது என்றும், தோன்றும் உருவங்கள் அங்கு புதைக்கப்பட்டவர்களின் உருவங்கள்தான் என்றும் புதியதொரு காரணத்தைக் கண்டுபிடித்துச் சொன்னார்கள்.
சொல்லப் போனால் அறிவியலையே கொஞ்சம் ஆட்டிவைத்த நிகழ்வுதான் இது. என்ன காரணம் சொல்வதென்று தெரியாமல் கண்டமேனிக்கு, இந்த பெல்மேஷ் முகங்களுக்கான காரணம் சொன்னது போலத்தான் இருந்தது. மரியா கொமேஷ் பொய் சொல்லும் பெண்மணி கிடையாது என்று ஆராய்ச்சி செய்தவர்கள் உட்பட அனைவரும் அடித்துச் சொன்னார்கள். அப்படியென்றால், நடந்த உண்மைதான் என்ன? மரியாவின் மகன்தான் அந்தப் படங்களை வரைகிறான் என்று வைத்துக் கொண்டாலும். ஐரோப்பாவில் ஒரு வீடு என்பது மிக விலையுயர்ந்த சொத்து. அப்படியான பெறுமதியான ஒன்றைப் பேய் இருக்கிறது என்று சொல்லி யாரும் வாங்காமல் போகும் நிலைக்கு, அந்த வீட்டில் உள்ளவர்களே ஆக்குவார்களா என்பது ஒரு பெரிய கேள்வியாக இருந்தது. தன்னுடைய வீட்டில் தானே படங்களை வரைந்து பேய் இருக்கிறது என்று காட்டினால், யார் வாங்குவார்கள் அந்த வீட்டை? யாருக்கு அதனால் நட்டம்? அத்துடன் சீமெந்துத் தரையில் உள்ள சீமெந்துக் கலவைத் துகள்களில் பல இரசாயனங்களைக் கலந்து விசித்திரமான வகையில் படம் வரையத் தேர்ந்த ஒரு சித்திரக் கலைஞனாகவுமல்லவா இருக்க வேண்டும்.
இந்த நிகழ்வு ஸ்பெயினை மட்டுமல்ல, ஐரோப்பாவை ஏன் உலகையே உலுக்கி வைத்த ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு நடந்த எதுவும் ஒளித்தோ, மறைவுகளிலோ நடந்தவையல்ல. அந்த வீட்டில் தங்கியிருந்து ஆராய்ந்து பார்த்த நேரடி சாட்சிகள் உள்ள உண்மை நிகழ்வு. நிகழ்வுகளுக்கான காரணங்களைத் தேவையெனின் நாம் ஆராயலாம். ஆனால், நடந்த நிகழ்வுகள் அனைத்தும் உண்மையானவை. எந்த ஒரு கட்டுக்கதைகளும் கலக்காதவை. நேரடியாகக் கண்முன்னே நடந்தவை. இந்த நிகழ்வுகளின் உண்மைத்தண்மைக்கு பெல்மேஷ் மக்களும், அந்த நகரத்தின் முனிசிபல் அதிகாரிகளும் ஆதரவாகவே இருந்தனர்.

Tuesday, 21 February 2017

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

எப்போதுமே மிதவாதத்துக்கும் தீவிரவாதத்துக்குமான ஆதரவில் இளைய சமுதாயம் இரண்டாவதில்தான் அதீத ஆர்வமும் ஆதரவும் கொண்டிருக்கும். நேதாஜி என்ற பேரைக்கேட்டாலே இன்றளவும் இளைஞர் கூட்டம் எழுச்சியடைவதற்கான வரலாறு மிகப்பெரியது. பிரிட்டிஷார் இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்தபோது காந்தி ஒரு பக்கம் அஹிம்சைப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார். அதேப்போல நாடு முழுவதும் பலவிதமான குழுக்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்தியாவில் முதன் முதலாக ஆங்கிலேயருக்கு எதிரான தீவிரவாதப்போராட்டத்தை இராணுவப்போராட்டமாக மாற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான். இன்றைய இந்திய இராணுவத்திற்கு அடித்தளமிட்டவரும் இவர்தான். (அவருடைய வரலாற்றைப்பற்றி எழுதுவதனால் அதற்கு தனியே ஒரு பதிவு தேவைப்படும் என்பதால் இந்தப்பதிவின் தலைப்பிற்கான சமாச்சாரத்தை பற்றி மட்டும் இதில் பார்க்கலாம்.
சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வந்திருக்கவேண்டிய நேதாஜி... உண்மையிலேயே என்ன ஆனார் என்று தெரியாமலேயே 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அவருடைய வரலாறு முடிக்கப்பட்டதுதான் இன்று வரையிலும் சுதந்திர இந்தியாவின் தீராத மர்மங்களில் நேதாஜிக்கு முதலிடம் வழங்கியிருக்கிறது.
1945ம் வருடம் நேதாஜி ஜப்பானின் தாய்பே நகரில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்ததாக அரசாங்கக்குறிப்புகள் மூடப்பட்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் அவர் அவ்வாறு இறக்கவில்லை. உண்மையில் அப்படியொரு விமான விபத்தே நடக்கவில்லை என்று அப்போதே செய்திகள் கசிந்திருக்கின்றன. 1945ம் ஆண்டு நடைபெற்றுக்கொண்டிருந்த போரில் ஜப்பான் சரணடையும் முடிவை எடுத்த மூன்றாவது நாளில் நேதாஜி விமானவிபத்தில் இறந்ததாக வெளியிடப்பட்ட செய்தியே, ஆங்கிலோ-அமெரிக்க படைகளிடம் போர்க்கைதியாக சிக்காமலிருக்க நேதாஜியால் நடத்தப்பட்ட நாடகம்தான் என்றும் ஒரு தகவல் உலவுகிறது. நேதாஜி இறந்ததாக தகவல் வெளியான சமயத்தில் உண்மையில் அவர் ஜப்பானின் டோக்யோ நகரத்தின் வழியாக சோவியத் யூனியனுக்கு சென்று விட்டதாக தகவல் உண்டு.
இன்று வரையிலும் நேதாஜி விஷயத்தில் இந்திய மக்களுக்கு தெரியாமல் போன மர்மமாய் நீடிப்பதில் கீழ்க்காணும் விஷயங்கள் கவனிக்கப்படவேண்டியவை...
1) தாய்வானின் அதிகாரிகள் விமான விபத்து நடந்ததாகச் சொல்லப்பட்ட தேதியில் அப்படியொரு விபத்து நடந்ததாக எந்தவித ரெக்கார்டுகளும் இல்லை என்று மறுத்திருப்பது இந்திய அரசாங்கத்தால் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
2) பிரிட்டிஷ் இண்டெலிஜென்சியின் ரகசியக்கோப்புகளில் பிரிட்டிஷ் பிரைம் மினிஸ்டர் கிளமெண்ட்ஸ் அட்லீ ‘’ போஸ் இப்போது எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும்’’ என்று முடிவெடுத்ததாக பதியப்பட்டிருக்கிறது. இது நடந்தது அக்டோபர் 1945ல். அப்படியென்றால் ஆகஸ்ட் 1945ல் போஸ் இறந்ததாகக் கூறப்பட்டது பொய்தானா?...
3) CIA எனப்படும் சென்ட்ரல் இண்டெலிஜென்ஸ் ஏஜென்சி 1950 வரையிலும் நேதாஜிக்கான தேடுதல் வேட்டையை தொடர்ந்திருக்கிறது. உண்மையிலேயே 1945லேயே நேதாஜி இறந்திருந்தால் 1950 வரையிலும் அவரைத்தேடியிருக்க வேண்டிய அவசியமென்ன?...
4) 1946ல் கம்யூனிஸ்ட் பார்ட்டியைச் சேர்ந்த கேலாச்சர் என்பவர் ஒரு பொதுமேடையிலேயே அப்போதைய இரீஷ் பிரசிடெண்ட் டி’வலேராவை டப்ளின் நகரில் நேதாஜியை வரவேற்றதாக விமர்சித்திருக்கிறார். டி’வலேராவும் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காதது கவனித்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சம். அத்தோடு மட்டுமில்லாமல் 1946க்கு பிறகு இந்தியாவிற்கு வந்திருந்த டி’வலேரா பத்திரிக்கையாளர்களிடம் ‘’நான் இங்கே போஸை சந்திப்பேன் என்று எதிர்பார்த்து வந்தேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்!
5) பிரிட்டிஷ் இண்டெலிஜென்சின் ஒரு ரிப்போர்ட்டில் நேதாஜி எங்கிருக்கிறார் என்பது நேருவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதனால்தான் அவர் வெளியுறவுத்துறையை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விஜயலெட்சுமி பண்டிட்டை ரஷ்யாவுக்கான இந்தியத்தூதராக நியமித்திருக்கிறார்

வேற்றுக்கிரக வாசிகள்

வேற்றுக்கிரக வாசிகள் எம்மை தொடர்புகொண்டார்களா என ஆராய முற்படும்போது, அவர்கள் எம்மோடு இணைந்து வாழ்ந்தார்களா என்ற கேள்வி எழுவதை தவ்ர்க்க முடியாது. அதற்கு முன்னர்,
வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய தகவல்களை அறிய வந்திருக்கும் நீங்கள், நிச்சயமாக அவர்கள் பற்றி பல தகவல்களை ஏற்கனவே படித்திருப்பீர்கள்.
அவற்றில் பிரபலமானவை எகிப்திய சுவர்களில் வரையப்பட்டிருக்கும் சுவரோவியங்கள்.
No automatic alt text available.
எகிப்திய பிரமிட்டுக்கள் கி.மு 3000 வருடங்களுக்கு முற்பட்டவை என பரவலாக அறியப்பட்டாலும். அதன் கால அளவு சுமார் கி.மு 10 000 வரையானதாக இருக்கலாம் என கற்தேய்வு மற்றும் படிவுகளை ஆராய்வோர் குறிப்பிடுகின்றனர்.
எகிப்தில் பரோ(?) மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மாபெரும் கட்டடங்கள் (எகிப்திய) பிரமிட்டுக்கள் ஆகும்.
பல மர்மங்களையும் இப்போது விலை மதிக்கமுடியாத பல பெறுமதியான கணிமங்களையும் கொண்ட அந்த பிரமிட்டுக்களின் சுவர்களில் எழுதவும், வரையவும் பட்டிருக்கும் சித்திர்/எழுத்துக்கள் இன்றுவரை பல ஆய்வாளர்களை சலிக்காமல் தன்பர்க்கம் ஈர்க்கிறது.
அந்த சுவர் சித்திரங்களில் பெரும்பாலானவை அக்கால அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் தொழில் நுட்ப உக்திகளை சுட்டுக்காட்டுவனவாக அறியப்படுகின்றது.
எனினும், அச்சுவரோவியங்களில் பல விடைதெரியா கேள்விகளை முன்வைக்கின்றன. அதில் முக்கியமானது அவர்களின் சுவரோவியங்களில் வரையப்பட்டிருக்கும் மனித உருவில் இருந்து வேறுபட்ட (ஆனாலும் மனிதனை போல் இரு கை இரு கால் உடைய) உருவங்களும் பறக்கும் தட்டு என இப்போது அழைக்கப்படும் தட்டுவடிவ வான் பறக்கும் பொருட்களுமாகும்.
இப்போது,
சுமார் 19-20 ஆம் நூற்றாண்டிலேயே வேற்றுக்கிரக வாசிகளின் நடமாட்டம் பற்றியும் அவர்களை தாம் பார்த்ததாக கூறியும்ல் பல தகவல்கள் வெளிவந்தன.
அதே போன்று வேற்றுக்கிரக வாசிகளின் நடமாட்டத்தை அந்த (எகிப்திய) காலப்பகுதியில் வாழ்ந்தவர்களும் பார்த்து வரைந்து வைத்திருக்கலாம் என்ற கருத்து சொல்லப்படுகிறது.
ஆனால், இப்போது நாம் பார்வையிட்டதாக கூறப்படும் வேற்றுக்கிரகவாசிகள் எம்மோடு இணைந்து செயற்படுவதாக எம்மில் எவரும் கூறுயதில்லை.
அப்படி இருக்கும் போது, பிரமிட் சித்திரங்களில் ஏன் மனிதர்களோடு இணைந்து வேற்றுக்கிரக வாசிகள் வரையப்பட்டிருக்க வேண்டும்?
அதுவும், சில இடங்களில் கூட்டாக நிற்பது போன்றும், சில இடங்களில் உதவுவது போன்றும், சில இடங்களில் போதிப்பது போன்றும் வரையப்பட்டிருப்பதன் காரணம் என்ன என்பது இன்றுவரை தீர்க்கமான பதில் இல்லாத கேள்வியாகவே இருக்கிறது.
ஆனால், அக்காலப்பகுதியில் குறிப்பிட்டதுபோல் மனிதனுடன் சேர்ந்து வேற்றுக்கிரகவாசிகள் இயங்கி இருக்க கூடும் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதும் பிரமிட்டுகள் தான்!
பல தொன்கள் நிறையுடைய கற்களை தூர இடத்தில் இருந்து நகர்த்தி பிரமிட்டுக்களை எப்படி கட்டினார்கள் எனபது ஒரு பெரும் கேள்வி. அதற்கு அடைமைகள் தொடக்கம், தொழில் நுட்பம் வரை பல விளக்கங்கள் ஊகமாக கொடுக்கப்படுகின்றன. எனினும், அடிமைகளைக்கொண்டு அப்படி பெரும் கட்டடங்களை கட்ட வேண்டியதன் அவசியம் என்ன?
தொழில் நுட்பம் காரணமாக கூறப்படும் போது, அந்த தொழில் நுட்பத்தை அவர்கள் எப்படி கற்றுக்கொண்டார்கள்?
கூறப்படும் பல தொழில் நுட்பங்கள் தற்போதைய தொழில் நுட்பங்களைக்கொண்டு கட்டுமாணிப்பதே கடினமானது.
பைதகர்சு தேற்றத்தை அவர்கள் மிக கச்சிதமாக பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால் அது அறியப்பட்ட ஆண்டாக கி.மு 500 ஆம் ஆண்டே வரையறுக்கப்படுகிறது.
சரி, அது மனிதனால் கட்டப்படவில்லை. மனிதனுக்கு உதவிய வேற்றுக்கிரக வாசிகள் மூலமே சாத்தியமானது என்றால். வேற்றுக்கிரக வாசிகள் அப்படி ஏன் கட்ட வேண்டும்? கட்டியவர்கள் எங்கே? இறந்தார்களா?
வரலாற்று பதிவுகளில் பரோமன்னர்களின் வரலாற்று சம்பவங்கள் இருக்கும் போது, அவர்களின் சம்பவங்கள் ஏன் இல்லை? மேலும், இந்த இடத்தில் மறுபடியும் குறிப்பிட்டு விடுகிறேன். “அடிமைகளைக்கொண்டு ஏன் அப்படி பெரும் கட்டிடத்தை கட்டினார்கள்?”
இதற்கான பதிலை/ ஊகத்தை மேலும் சில-பல உறுதியான சம்பவங்களை பார்த்த பின்னர் ஆராயலாம்.

பேய்கள் - அதிரவைக்கும் அறிவியல் உண்மைகள்

மூடநம்பிக்கைக்கு இணையாக மட்டுமல்ல, அதற்குத் துணையாகப் பரப்பப்பட்டது பேய், பூதம், பிசாசு, ஆவி மூடநம்பிக்கைகள். நம் நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகளிலும் இந்த மூடநம்பிக்கை உண்டு. தொலைக்காட்சித் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் ஊடக வியாபாரிகள் கிராபிக்ஸைப் பயன்படுத்தி பேய் அச்சத்தை இன்னும் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பகுத்தறிவுப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் நாம் கேள்விகளை எழுப்பி வருகிறோம். இதுவரை யாரும் பதில் சொன்னதில்லை. மாறாக அவர் சொன்னார் என்றோ, நான் பார்த்தேன் என்றோ சொல்லித் தப்பிவிடுவார்கள். எங்களுக்குக் காட்டு என்றால் அதற்கு உடன்பட மாட்டார்கள். மூடநம்பிக்கை வணிகர்களின் பித்தலாட்டங்கள் இப்படித் தொடர்ந்து கொண்டிருக்க அமெரிக்காவிலிருந்து வெளிவரும் skeptical inquirer மாதமிருமுறை இதழின் மேலாண்மை ஆசிரியர் பெஞ்சமின் ரட்ஃபோர்ட் (Benjamin Radford) எழுதியுள்ள இந்தக் கட்டுரை அறிவியல் பூர்வமாக பேய்-பிசாசு பற்றி ஆராய்கிறது.
பேய் பிசாசுகளை நம்புகிறீர்களா? நீங்கள் மட்டும் தனி ஆளல்ல. 2005ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, 37 விழுக்காடு, பேய் வீடுகளையும் மூன்றில் ஒரு பங்கு பேய் பிசாசுகளையும் நம்புகின்றனர். உலக முழுவதிலும், ஆயிரக்கணக்கான மக்கள், ஒரு பொழுதுபோக்காக, ஆனால், மும்முரமாக, பேயைத் தேடி வருகின்றனர்! அய்யத்திற்கிடமான செய்திக் கோப்பைச் சேர்ந்த ஷாரன் ஹில் என்ற ஆய்வாளர் அமெரிக்காவில் 2000 தீவிர தொழில் முறையில்லாத பேய் வேட்டைக் குழுக்கள் இருக்கலாம் என்று கூறுகிறார்..
கோடிக்கணக்கான ஆண்டுகளாக பேய்கள் மாக் பெத்திலிருந்து விவிலியம் வரை, மற்றும் எண்ணமுடியாத கதைகளிலும், நாட்டுப்புறக் கதைகளிலும் ஒரு மிகுந்த ஜனரஞ்சகமான பொருளாகவே இருந்து வந்துள்ளன. உலகம் முழுவதும், பேய் பிசாசு பற்றிய இயற்கைக்கு மாறான நம்பிக்கைகள் பரவிக் கிடக்கின்றன.
சாவின் விளிம்பில் ஏற்படும் அனுபவங்கள், மரணத்திற்குப் பின் வாழ்வு, ஆவி உலகத் தொடர்பு உட்பட பல காரணங்கள் இயற்கைக்கு மாறான நம்பிக்கைகளாக அமைகின்றன.
இறந்தவர்கள் ஆவியாக நம்முடன் இருக்கிறார்கள் என்பது ஒரு பழைய நம்பிக்கை. அது பலருக்கு அமைதியைக் கொடுக்கிறது. நமது அன்புக்குரிய, ஆனால் இறந்துபட்ட ஒரு குடும்ப உறுப்பினர் நம்மைத் தேடவில்லை; ஆனால் தேவைப்படும் நேரங்களில் நம்முடன் இருக்கிறார்களா? என்றெல்லாம் அவர்கள் நம்ப விரும்பவில்லை. பலர் பேய் பிசாசுகளில், சொந்த அனுபவத்தின் காரணமாகவே நம்பிக்கை கொண்டுள்ளனர்; சிலர் பார்த்துள்ளதாகக் கூறுகின்றனர். அல்லது, விளங்கிக் கொள்ள முடியாத சில தோற்றங்களை உணர்ந்து இருக்கின்றனர்.
பிசாசுகளைப் பற்றிய வாக்குவாதமும் அறிவியலும்
சொந்த அனுபவங்கள் என்பது ஒன்று ; ஆனால், அறிவியல் ஆதாரம் என்பது வேறு. பிசாசுகளைப் பற்றி ஆராய்வதில் உள்ள தொல்லை என்னவென்றால், பேய், பிசாசு என்பது பற்றி, உலக முழுதும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு விளக்கம் இல்லாததுதான். சிலர் அவை இறந்தவர்களின் ஆவி என்றும் ஏதோ சில காரணங்களுக்காக தாங்கள் போகவேண்டிய இடத்தைத் தவறவிட்டதாகச் சொல்லுகிறார்கள். வேறு சிலர், பேய் பிசாசுகள், தொலை உணர்வு உள்ள பிம்பங்கள் என்றும், உலகத்திற்கு நமது மனங்களிலிருந்து காட்டப்படுவதாகும் என்று கூறுகின்றனர்.
சிலர் வேறுவிதமான பிசாசுகளை உண்டாக்குகிறார்கள். மிச்சமான அச்சங்கள், புத்திசாலி பூதங்கள், நிழல் மனிதர்கள் போன்றவை அவை. பல இனமக்களின் தேவதைக் கதைகள் போலவும் டிராகன் கதைகள் போலவும், எத்தனை விதமான பேய் பிசாசுகளை நீங்கள் விரும்புகிறீர்களோ, அத்தனையும் உள்ளன. பேய்கள் பற்றிய கருத்துகளில், பல முரண்பட்டும், உள்ளடங்கியதாகவும் உள்ளன. உதாரணமாக, பேய்கள் என்பது பொருளா? அல்லது பொருளாக இல்லையா? அவை திடப் பொருள்களுக்கு ஊறு செய்யாமல், ஊடுருவிச் செல்ல முடியுமா? அல்லது அவை தானே அறைக் கதவைச் சாத்திக் கொள்ளவோ, பொருள்களை விட்டெறியவோ முடியுமா? தர்க்க நியாயத்தின்படியும், உருத்தோற்றத்தின் படியும் அவை இருக்க வேண்டும்; அல்லது இல்லாது இருக்க வேண்டும். பேய்கள் மனித ஆன்மாக்களாக இருந்தால் அவை ஏன், ஆடை அணிந்து தோன்ற வேண்டும்? மேலும், இயங்காத பொருள்களான தொப்பி, பிரம்பு, ஆடைகளுடன் காணப்பட வேண்டும்? ரயில்கள், கார்கள், வண்டிகளிலும் கூட பேய் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பழி வாங்கப்படாது இறந்தவர்களின் ஆவிதான் பேயென்றால், அவை ஒரு ஆவியுலகு சார்ந்த(?) இடைமனிதன் வாயிலாகப் பேசுவதாகச் சொல்லப்படுவதால், அவை கண்டுபிடிக்க முடியாத கொலைகளைப்பற்றி ஏன் சொல்லுவதில்லை? அவை தங்களது கொலைகாரர்களைப் பற்றி அடையாளம் காணமுடியும். அதைப்போல, பேய் பிசாசுகளைப் பற்றி எந்த ஒரு செய்தியும், தர்க்க ரீதியான காரணங்களுக்கு உட்பட்டுத்தானே இருக்க வேண்டும்?
பேய் வேட்டையாடுவோர் பலரும் பேய்களின் தோற்றத்தைக் கண்டுபிடிக்க பல ஆக்கப்பூர்வமான முறைகளையும் ஏமாற்று வழிகளையும் கையாளுகின்றனர். உண்மையில் எல்லா பேய் தேடுவோர்களுமே, தாம் அறிவியல் முறையில் செயல்படுவதாகவே கூறுகின்றனர். அப்படியே தங்களைத் தோற்றப்படுத்திக் கொள்ளவும் செய்கின்றனர். ஏனென்றால், அவர்கள் உயர்ந்த அறிவியல் கருவிகளையும், கதிர் இயக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான கருவி(Geiger counter), மின்காந்த நில கண்டுபிடிப்பான்கள், அயன் (Ion) கண்டுபிடிப்பான், இன்ஃப்ராரெட் (Infrared) காமிராக்கள், மிக நுண்ணிய மைக்ரோபோன் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இதுவரை எந்தவொரு கருவியும் உண்மையில் பேய்களைக் கண்டுபிடிக்க உதவியதாகத் தெரியவில்லை.
சிலர் இதற்கு மாறான கருத்துகளைக் கொண்டுள்ளனர். பேய்கள் இருப்பதை நிரூபிக்க முடியாததற்குக் காரணம், ஆவி உலகத்தைப் பற்றி அறிய நாம் தகுந்த தொழில்நுட்பம் கொண்டு இருக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.. ஆனால், இதுவும் சரியாக இருக்க முடியாது. பேய்கள் நாம் வாழும் சாதாரண உலகத்தில் இருந்தால், அவை கண்டுபிடிக்கப்பட்டு, வீடியோ, ஆடியோ, ஃபிலிம் நிழற்படங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவ்வாறு இல்லாததால், அவை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பேய்கள் இருந்து அவை அறிவியல்பூர்வமாக காணப்பட்டுப் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதற்கான சான்றுகள் நம்மிடம் இருப்பதாகக் கூற முடியும். நாம் அவ்விதம் சான்றுகள் கொண்டிருக்கவில்லை. பேய்கள் இருந்து, அவைகள், அறிவியல்பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டு, பதிவு செய்யப்படாமலிருந்தால், பின் எல்லா நிழற்படங்களும், வீடியோ, மற்றும் பேய்தான் என்று சொல்லப்படும் எல்லா பதிவுகளும், பேய்களினுடையதாக இருக்க முடியாது.
பேய்களைப் பற்றிய பல்வேறு கருத்துகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. பல பத்தாண்டுகளாக, தொலைக்காட்சி உட்பட பல பேய் வேட்டைக்காரர்களும் ஒரு சிறிய சாட்சியத்தைக் கொண்டு கூட பேய் இருப்பது நிரூபிக்கப்படவில்லை என்பது ஆச்சரியமூட்டவில்லை

அகோரிகள்



மனித வரலாற்றில் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டுச் சடங்குகள் எதுவும் குழப்பங்கள், வெறுப்பு, பயம், அருவெறுப்பு போன்றவைகள் சரிசமமான அளவில் நமக்கு ஏற்படுத்தியிருக்காது.
அப்படி ஏற்படுத்தும் சடங்குகளைப் பின்பற்றுபவர்கள் தான் இந்தியாவில் உள்ள நரமாமிசம் உண்ணும் அகோரிகள் (அகோரி சாதுக்கள்) ஆவார்கள்.
நர மாமிசம் உண்ணுவது மட்டுமல்லாது, இறந்த பிணங்களுடன் உடல் உறவு கொள்வதற்காகவும் அகோரிகள் அறியப்படுபவர்கள்.
அதேப்போல் பல வித சடங்குகளுக்கு மனித மண்டை ஓடுகளையும் பயன்படுத்துபவர்கள் அவர்கள். ஆனால் அகோரிகளைப் பற்றி சொல்ல வேண்டுமானால் இதோடு நின்று விட முடியாது.
அவர்களைப் பற்றி பேச இன்னும் ஏராளமான விஷயம் உள்ளது. அவற்றைத் தான் நாம் பார்க்கப் போகிறோம்.

உண்மை: 1
மனித நீர்மம் மற்றும் அழுகும் நிலையில் உள்ள மனித சவம் ஆகியவைகளையும் கூட அவர்கள் உண்ணுவார்கள். இப்படிச் செய்வதால் விஷயங்களில் உள்ள ஒருமையை (புனித மற்றும் புனிதமற்ற) தன்மயமாக்க முயற்சி செய்வார்கள். இதன் மூலம் அழகின் உண்மையான புலனுணர்வை வரையறுப்பார்கள்.
உண்மை: 2
அகோரிகளின் மிகவும் நெறி தவறிய வழக்கமாக கருதப்படுவது பிணத்தைப் புணருவது. அவர்களை பொறுத்த வரையில், காளி தேவி உடலுறவில் திருப்தியை எதிர்ப்பார்க்கிறார். அதனால் தகுந்த பிணம் ஒன்றினை கண்டுப்பிடித்து, அதனுடன் உடலுறவு வைத்துக் கொள்வார்கள்.
புகழ் பெற்ற புகைப்படக்காரரான டேவர் ரோஸ்டுஹர் ஒரு அகோரியை பேட்டி எடுக்கையில், அந்த அகோரி கூறியதாவது, "வெளி உலகத்திற்கு மூர்க்கத்தனமான தெரியும் காரியங்களை நாங்கள் செய்வதற்கான காரணம் மிகவும் சாதாரணமானது.
அருவெறுப்பான விஷயத்தில் புனிதத்தைக் கண்டுபிடிப்பதே அதற்கான காரணம்! ஒரு பிணத்துடன் உடலுறவு கொள்ளும் போதோ அல்லது மனித மூளையை உண்ணும் போதோ ஒரு அகோரி கடவுள் மீது தன் கவனத்தை வைத்திருந்தால், அவன் சரியான பாதையில் செல்கிறான் என அர்த்தமாகும்."
உண்மை: 3
பில்லி சூனியம் மற்றும் இயற்கையை மீறிய சக்திகளில் அகோரிகள் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். பிணத்தைப் புணரும் போது, அவர்கள் அதிர்ச்சி ஊட்டும் சடங்குகளில் ஈடுபடுவார்கள். இறந்த சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் போது, இயற்கையை மீறிய சக்திகள் தங்களுக்கு அதிகரிக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
அதனால் அகோரிகளின் கூட்டம் இந்த சடங்கினை செய்திட இரவு நேரத்தில் கல்லறையில் ஒன்று கூடுவார்கள். எரிக்கப்பட்ட சவத்தின் சாம்பலை தன் உடலின் மீது அகோரி பெண்கள் பூசிக் கொள்வார்கள். கொட்டு அடிக்கப்பட்டு, மந்திரங்கள் ஓதப்பட்டு, கன்னியிழப்பு நடைபெறும். இந்த செயல் நடைபெறும் போது, அந்த பெண் மாதவிடாய் காலத்தில் இருப்பது அவசியமாகும்.
உண்மை: 4
அகோரிகள் தங்கள் மனதில் பகையையோ அல்லது வெறுப்பையோ வைத்திருக்க மாட்டார்கள். வெறுப்பை கொண்டிருந்தால் தியானத்தில் ஈடுபட முடியாது என்பது அவர்களுடைய நம்பிக்கையாகும்.
அதேப்போல் தங்கள் உணவை தாங்கள் உண்ணும் கிண்ணத்திலேயே நாய்களுக்கும் மாடுகளுக்கும் பகிர்ந்து உண்ணுவது அவர்களை மகிழ்விக்கும். இவ்வகையான எதிர்மறையான எண்ணங்களை (மிருகங்கள் தங்கள் உணவை அசுத்தம் செய்வது) நீக்கினால் தான், சிவபெருமானுடன் ஐக்கியமாகும் தங்களின் ஒரே குறிக்கோளின் மீது கவனத்தை செலுத்த முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

உண்மை: 5
மிகச்சிறய சணல் கோவணத்தை தவிர அவர்கள் உடலில் எந்த துணியும் அணியாமல் தான் அலைவார்கள். சில நேரங்களில் இறந்த மனித உடலின் சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொண்டு நிர்வாணமாகவும் கூட சுற்றுவார்கள்.
சாம்பல் என்பது வாழ்க்கையின் 5 அதிமுக்கிய பொருட்களை கொண்டு செய்யப்படுவது. அதனால் நோய்கள் மற்றும் கொசுக்களிடம் இருந்து அது அகோரிகளை பாதுகாக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். பொதுவாக சிவபெருமானின் தோற்றத்தைப் போல நடந்து கொள்ளவே அவர்கள் இப்படி செய்கிறார்கள்.
உண்மை: 6
கபாலம் என்றழைக்கப்படும் மனித தலையை உடைமையாக வைத்திருப்பதே அகோரியின் உண்மையான சின்னமாகும். அதற்காக கங்கை நீரில் மிதந்து செல்லும் பிணங்களை அவர்கள் கைப்பற்றிக் கொள்வார்கள். அதன் பின் அந்த மண்டை ஓட்டை கொண்டு மதுபானம் குடிக்கவோ அல்லது உணவருந்தவோ அல்லது பிச்சை பாத்திரமாகவோ பயன்படுத்துவார்கள்.
உண்மை: 7
தூய்மை மற்றும் தூய்மையற்ற, புனிதம் மற்றும் புனிதமற்ற, சுத்தம் மற்றும் அசுத்தத்திற்கு இடையே உள்ள விதிமுறைகளை உடைப்பதன் மூலம் குணப்படுத்தும் அதிசய சக்தியை தாங்கள் பெறுவதாக அகோரிகள் நம்புகின்றனர். இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிய பிறகு, சுடுகாட்டில் அவர்கள் அமைதியான முறையில் தியானம் செய்வார்கள்.
உண்மை: 8
சமயத்தின் புனிதத் தன்மைக்கு மதிப்புக் கொடுக்காததன் மூலம் நிர்வாணம் மற்றும் ஆத்மாவின் மோட்சத்திற்கு பாதை கிடைக்கும் என இந்த இனம் நம்புகிறார்கள். அதனால் தான் அவர்கள் சமயத்தின் புனிதத் தன்மைக்கு மதிப்புக் கொடுக்காமல், காரணமே இல்லாமல் மிக சத்தமாக சபிப்பார்கள். இந்த ஒரே வழியில் தான் அகோரிகளால் அறிவொளியை அடைய முடியும்.
உண்மை: 9
மனித மண்டை ஓடுகளை ஓரி அணிகலனாக தங்கள் கழுத்தில் மாலையாக அணிவித்திருப்பதை நாம் காண நேரிட்டிருக்கலாம். மனித மண்டை ஓடுகளை கொண்டு செய்த இந்த ஒரே அணிகலனை தான் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக கருதுகின்றனர்.
எரிக்கப்பட்ட பிணங்களின் தொடை எலும்பையும் கூட நடை குச்சியாக சில அகோரிகள் பயன்படுத்துவார்கள். இது அகோரியின் சின்னமாகும். அவர்கள் தங்களது தலை முடியை வெட்டவோ அல்லது குளிக்கவோ மாட்டார்கள். அதனால் தான் இயற்கையான ஜடாமுனி அவர்களுக்கு ஒரு அடையாளமாகவே விளங்குகிறது.
உண்மை: 10
அகோரிகள் கஞ்சாவை புகைப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள். அதற்கு காரணம், அவர்கள் விடாமல் கடைப்பிடிக்கும், விடாமுயற்சியுள்ள தியானத்தில் மனதை ஒருநிலைப்படுத்த அது உதவும் என நம்புகின்றனர்.
சொல்லப்போனால், எப்போதுமே அவர்கள் கஞ்சாவின் தாக்கத்திலேயே தான் இருப்பார்கள். இருப்பினும் பார்ப்பதற்கு அமைதியாகவே காணப்படுவார்கள். இந்த போதை வஸ்து கொடுக்கும் பிரமை, மிக உயரிய ஆன்மீக அனுபவங்களாக கருதப்படுகிறது.

அடேங்கப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!

ஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்.
அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி “இப்ப நான் எங்கிருக்கேன்ப? என்று பேச ஆரம்பித்து வாக்கிங் கிளம்பி
விடும். அதன் பிறகு மீண்டும் 60 வயசுக்கு ஆயுட்காலம் இது புதிய ஹாலிவுட் படக்கதை அல்ல!
உலகம் முழுக்க சோடாப்புட்டி கண்ணாடியை மாட்டிக் கொண்டு 100க்கணக்கான விஞ்ஞானிகள் இரவு, பகலாக பிணங்களுடன் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிற சர்வமகா நிஜம்
மனித உடலில் எது ஊன மடைந்தாலும் செயற்கை கருவி, பைபாஸ் சர்ஜரி வரை சரி செய்து விட முடிகிறது. விலங்குகளின் குளோனிங், டெஸ்ட் டிïப் பேபி என பிறப்பின் ரகசியத்தைக் கூட நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால், ஆதாம்-ஏவாள் காலம் முதல், உயிர் பிரிவதை மட்டும் ஒருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு வேளை, அப்படி கண்டு பிடித்து விட்டால்…ப வெரி சிம்பிள்! “இப்பத்தான் உங்களை நினைச்சேன். ஆயுசு ஆயிரம் சார் என்று சொல்ல வேண்டியதிருக்கும்
உலக விஞ்ஞானிகள் நடத்தி வரும் பகீர் ஆராய்ச்சி களை ஹார்ட் அட்டாக் வராத வகையில் சர்வ ஜாக்கிரதையாக மேலும் படிக்க ஆரம்பியுங்கள். அமெரிக்காவைச் சேர்ந்த பிலிக்கர் என்பவரது புகைப் படங்கள் தாம் உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகளை மரணத்தை வெல்ல முடியும் என்று உஷார் படுத்தியது. ஏராளமான விலங்குகளின் ஆவி பிரிவதை கடைசி நொடிகளில் கிளிக் செய்து வைத்திருக்கிறார் பிலிக்கர் இவரது கூட்டாளியான விஞ்ஞானி பி.டபுள்ï போத்தா “கண்ணுக்குத் தெரியும் இந்த ஆவியை ஒரு டெஸ்ட் டிïப்பில் பிடித்து விட்டால் போதும். அக்குவேறு, ஆணி வேறாக ஆராய்ச்சி செய்து மரண ரகசியத்தை கண்டு பிடித்து விடுவோம் என்கிறார்.
வாஷிங்டன், டகோமாவில் உள்ள ஐ.ஏ.என்.டி.எஸ் எனப்படும் இன்டர்நேஷனல் “அசோசியேகன் பார் நியர் டெத் ஸ்டடீஸ் என்ற அமைப்பு மரணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது. டாக்டர் ஜெப் தலைமையில் பலர் இதன் உறுப்பினர்களாக இருக்கி றார்கள். இவர்களுக்கு வேலைப யாராவது சாகப் போவதாக கேள்விப்பட்டால் அவருடன் கடைசி வரை இருந்து, கண்காணித்து, ஆராய்ச்சி செய்வது தான்!வயிற்றுவலி முதல் ஹார்ட் அட்டாக் வரை மருந்து கண்டுபிடித்த நாம் மூளைச்சாவுக்கும் மருந்து கண்டுபிடிப்பது அவசியம் என்கிறார்கள் இவர்கள்.
சாவு என்பது ஒருசாதாரண நிகழ்வு. தேவையில்லாமல் இதன் மீது நமக்கு பீதி ஏற்பட்டு விட்டது மரணத்திற்கு முன்னதாக முதுமைக்கு மருந்து கண்டு பிடிக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து. இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் மிக்கேல் சபோம் நான் மரணத்துக்கு மருந்து கண்டு புடிச்சுட்டேன் என்று கத்துகிறார்! ஒருவரது மரணம் எப்போது தள்ளிப் போனதோ, அப்போதே மரணத்தை வென்று விட்டதாகத்தான் அர்த்தம். வேண்டுமானால் இது தொடக்கமாக இருக் கலாம் என்கிற அவர் பாம் ரெனால்ட்ஸ் என்கிற சாகக் கிடக்கிற பெண்மணிக்கு உயிர் பாலித்தவர்.
இருதயமும், மூளையும் முற்றிலும் செயலிழந்து பெரிய, பெரிய டாக்டர்களால் கைவிடப்பட்டு, உடல் டெம்ப ரேச்சர் 60 டிகிரிக்கும் குறை வான பாம் ரெனால்ட்சை தனது நவீன அறுவைசிகிச்சை மூலம் உயிர் பிழைக்க வைத்தி ருக்கிறார் மிக்கேல். முழுவதுமாக மரணித்துப் போன எனது மூளையில் முதன் முதலாக ஒரு சின்ன சத்தத்தைக் கேட்டேன். புர்ர்ர்ர்… என்ற அந்த சத்தம் தான் மெல்ல எனக்கு உயிர் கொடுத்தது. சர்வ நிச்சயமாக நான் மரணத்தை உணர்ந்து திரும்பியிருக்கிறேன் என்கிறார் பாம் ரெனால்ட்ஸ்.
இவர்களைப் போலவே கெவின் வில்லியம்ஸ், பெத்தார்ட்ஸ் பெட்டி, ஆன்டர்சன் ஜார்ஜ், சிட்டிசன் ஹெரால்டு, டர்ட் சார்லஸ், என உலகம் முழுவதும் ஏகப் பட்ட விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். உயிர் பிரியும் போது வலிக்குமாப வலிக்காது என்கிறார்கள் இவர்கள் ஒட்டு மொத்தமாக! உடல் உபாதை களால் ஏற்படுவது தான் வலியே தவிர, மரணத்துக்கு வலி கிடையாது என்கிறார் கள். செத்துப்போன உடலை ரோபோ போல் நவீனபபஎந் திரங்கள் மூலம் இயங்க வைக்க முடியுமாபபஎன்ற நம்பிக்கையில்பகடந்தப18 ஆண்டுகளாகபபநூதன தயாரிப்புகள் மூலம் போராடிக் கொண்டிருக்கி றார் டாக்டர் பி.எம்.எச். அத்வதார் என்பவர்.
இதெல்லாம் நடக்கிற விஷயமா டாக்டர்பஎன்றால், “எதையும் கண்டுபிடிக்கப்படு வதற்கு முன்னால் நம்புவது கஷ்டம் தான் ரெயில், விமானம், செல்போன்களை எல்லாம் நீங்கள் நம்பவா செய்தீர்கள் என்கிறார். இந்த அதிர்ச்சி விஞ்ஞானி கள் உடற்பயிற்சி, உணவு முறை, ஆரோக்ய வாழ்க்கை மூலம் மனித வாழ்வை நீட்டிக்க முடியுமாப என்பது பற்றியும் இயற்கை ரீதியிலான ஆராய்ச்சி செய்யவும் தவற வில்லை. ஒரு சிலரால் மட்டும் எப்படி 110 வயது வரை வாழ முடிகிறதுப என்கிற கேள்விக் குறிக்கும் இவர்கள் ஒருபுறம் விடை தேடிக் கொண்டிருக் கிறார்கள். “கடைசி மூச்சு வரை மருத்துவ கருவிகளை கண்டு பிடித்து விட்ட விஞ்ஞானி களின் அருமை பற்றி உங்க ளுக்குத் தெரியவில்லை. நிச்சயம் ஒரு நாள் மரணத்தின் சூட்சுமம் வெளியே தெரிய வரும் என்கிற ரஷ்யவிஞ் ஞானி ஆன்ஸ்டின்பெராக் வெளி உலகுக்கு தெரியாமல் வேறொரு ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.
இறந்து போன பிணங் களுக்கு ஊசி போட்டு, உடலைப் பிரித்து உள்ளுக்குள் மருந்து, மாத்திரைகளை வைத்து தைத்து, நவீன கருவி கள் மூலம் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து, என்றாவது ஒரு நாள் இது எழுந்து நடமாடும் என்கிற ரீதியில் கடந்த 20 ஆண்டுகளாக இருட்டுக் கூடத்திலேயே தனது பகல் வாழ்க்கையையும் கழித்து வருகிறார். இவர்கள் சொல்வதைப் போல் ஒரு வேளை உயிர் ரகசியம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டால்… பூமி பிதுங்கி வழியும் ஜனத்தொகை, அத்தனை பேருக்கும் உணவு, இருப்பிடம் குடிதண்ணீர் வசதி என மேலும் எழும் ஆயிரக்கணக்கான பூலோக பிரளயங்களுக்கு மேலும் நாம் விடை தேடவேண்டிய திருக்கும்.
“அடேங்கப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!