Thursday, 23 February 2017

யாளி....!?

யாளி - இந்த சொல்லை கேள்வியுற்றிருப்பீர்கள். இது ஒரு விலங்கா?இயந்திரமா? அல்லது கற்பனையா..!
Image may contain: one or more people
யாளி தென்னக இந்து கோவில்களில் காணப்படும் இவற்றின் சிற்பங்களை காணாமல் கருவறைக்கு செல்ல வாய்ப்பில்லை. ஆனால் யாளி என்பது பெரும்பாலானோரால் இந்துக் கோயில்களில் காணப்படும் ஒரு கற்பனை உயிரினச்சிற்பமாகவும் கருதப்படுகிறது. ஆனால்
No automatic alt text available.
வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும் ….
– நக்கண்ணையார், அகம். 252
No automatic alt text available.
அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கத்தே விழுவதை ஒருபோதும் அறியாத வெற்றியை உடைய வேட்டைக்குச் செல்லும் வாள் போன்ற
வரிகளையுடைய புலியானது நடுங்குமாறு, ஆளியானது பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவூட்டும் உறுப்புடன் காணப்படும் யாளி, குமரி கண்டம் என்ற லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகம் என்றும் நம்பப்படுகிறது. யாளி காட்டில் வாழும் விலங்கு என்றும், அது புலியைக் கொல்லும் என்றும், யானையை அது தன் நகங்களால் பற்றி இழுக்கும் என்றும் அதன் ஆற்றலை விளக்குகிறது. யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் தலைகளோ வேறு ஒரு விலங்கின் சாயலில் வடிவமைக்கப்படுகின்றன. யானை, சிங்கம் (சிம்மம்), ஆடுகளின்(மகரம்) தலைகளையும், அரிதாக நாய், எலிபோன்றவற்றின் தலைகளையும் யாளியிடம் காணலாம்.
பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்
சிம்ம யாளி
மகர யாளி
யானை யாளி.
யாளிகள் கோவில்களை பாதுகாப்பதுமாகவும் மக்களை ஆலயத்திற்கு வழிநடத்துவதாகவும் நம்பப்பட்டது.
முதல் கோணமான விலங்கு :
நம் தமிழ் வரலாற்றில் யாளிகள் யானையின் உயரத்தை விட ௩, ௫ (3,4) மடங்கு உயரமாக இருந்துள்ளது. ஏனெனில் சிற்பங்களில் யானையை விட பெரிய அளவிலும், அதன் மேல் இருந்து யானையை ஆதிக்கம் செலுத்தும் வகையில் உள்ளது. இது அன்றில் பறவை போலவும், அனிச்சம் செடியினம் போலவும் வாழ்ந்து மறைந்துபோன உயிரினம் ஆகும்.
எனவே முற்காலங்களில் காணப்பட்டு அழிந்த இனமான டையனோசர்களாகவும் கருதப்பட வாய்ப்புள்ளது, இன்னும் பல அறிஞர்கள் இவற்றை பாண்டியர்களின் டையனோர்களாகவும் குறிப்பிடுகின்றனர்.
ஏனெனில் தமிழ் மன்னர்களின் மூவேந்தர்களில் பழமையான பாண்டியர்களே லெமூரியாவை ஆட்சி புரிந்தனர். ஆகவே இவை லெமூரியாவில் வாழ்ந்து அழிந்த இனமாகவே கருதப்படுகிறது. இதன் உண்மையை மட்டுமல்லாமல் நம் தமிழ் வரலாற்றை உலகிற்கு அறிந்து கொள்ள செய்ய இயலாமலும், அகழ்வராய்வுகளை தடுக்கும் நோக்கிலேயே இந்திய அரசு செயல்படுகிறது.
அடுத்த கோணமான இயந்திரம்:
நம் அறிவியலில் இவை வேற்றுகிரக வாசிகளின் வாகனமாகவும் (ufo, flights) இருந்திருக்கலாம்,
நம் யாளிகள் கடவுளின் பாதுகாவலனாகவும் ( ஆலயங்களில் இந்த பாதுகாவலர்களை கடக்காமல் கடவுளை காண இயலாது) இருக்கிறது. மேலும் இந்து கடவுள்களுள் தேவர்களின் தலைவனான இந்திரனின் வாகனம் ஐராவதம் ( யானை). அது மிக நீண்ட ௪ (நான்கு)தந்தங்களை உடையதாகவும், வானில் பறந்து செல்ல ஏதுவாக இறக்கைகளையும் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், யாளியின் உருவத்தை ஒத்ததாகவும் காணப்படுவதால், வேற்றுகிரக வாசிகளின் பறக்கும் இயந்திரமாகவும் இருந்திருக்கலாம். ஆகவே அவற்றை கண்ட அன்றைய மக்கள் அதிசக்தி படைத்த அவற்றை தங்கள் கடவுளின் பாதுகாவலனாகவும், அந்நாளில்
மனிதனை அச்சுறுத்தம் கொடும் மிருகங்களான சிங்கம், புலி, யானைகளை அடக்கி அதிகாரம் செய்வதாக தங்களது சிற்பங்களில் காட்டியுள்ளனர்.
இந்த யாளியை அறிவியல் பூர்வமாகவோ, உண்மை பூர்வமாகவோ காண்பது உங்களின் முடிவு.
நம் தமிழ் மக்கள் அறிவியலிலும், கற்பனை வளத்திலும், வீரத்திலும் சிறந்து விளங்கியதை நாம் அறிவோம். இன்னும் நம் தமிழர் வரலாற்றை தேடி செல்லும் தேடலாய்.

No comments:

Post a Comment