Monday, 21 November 2016

நானும் நிலவும்

நிலவுடன் கைகோர்த்து
இப்பால்வெளியில்
உலாவெண்ணிய
இப்புவி..






















எட்டிவிடும் தூரத்தில்
எட்டி நின்று....
தொட்டுவிடத்துடித்தது...
தொட்டுவிடத்தொடுத்ததெல்லாம்...
தோல்வியைத்தழுவவே...

தன்னியலாமையறித்து....
தன்னிலைமறத்து.....
தலைகவிழ்த்து.....
களங்கமுற்று கலங்கியது,
கண்கள் கடலானது....

இப்புவி...
அந்நிலவின் வடுக்களில்
வேதனையுற்றும்...
அந்நிலவின் குளிர்ச்சியில்
வேதனையற்றும்...

இப்புவி அந்நிலவின்
நினைவுகளோடு
இப்பால்வெளியில்
கனவோடு சுற்றிக்கொண்டும்

அந்நிலவு இப்புவியின்
நினைவுகளோடு
இப்பால்வெளியில்
இப்புவியையே சுற்றிக்கொண்டும்

தன் வாழ்நாளை
கழித்திடயெண்ணுகிறது.....
இவ்வுயிரற்ற உணர்வுற்ற
இவ்விரண்டின் வேதனையை
#எனையன்றி_யாரறிவார்__??

No comments:

Post a Comment